madurai viswa - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  madurai viswa
இடம்:  madurai
பிறந்த தேதி :  27-Jul-1995
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Apr-2019
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  8

என் படைப்புகள்
madurai viswa செய்திகள்
madurai viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2019 2:42 pm

மலை சுமக்க
தயங்கியதில்லை - ஒருநாளும்
அங்கீகாரங்கள்
மறுக்கப்பட்டன - ஒவ்வொருநாளும்

முழுமுற்றாய்
அறுந்தேவிட்டது இதயம்
ஆத்திரம் தாங்காமல்
அதன்மீதுதான் நீங்கள்
ரொம்ப நேரம்
ஆணியடித்துக்கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் வாதத்தை
நானும் ஏற்கிறேன்
உலகம் நல்லவர்களால் நிரம்பியதுதான்
ஆனால் அது உங்களுக்கு
நல்லது மட்டுமே நடக்கும் வரைதான்

கோட்டைகள் மீதிருப்பதாகவே
நான் நம்பிக்கொள்கிறேன்
நீங்கள் குட்டும் போதுதான்
உண்மையான உயரம்
உரைத்துவிடுகிறது

என் அன்பை எடுத்துதான்
நீங்கள் காலணிகளை துடைக்கிறீர்கள்
தூய்மையில்லாமல் தூக்கம் வராதென ஒரு காரணமும்
சொல்கிறீர்கள்

ஒவ்வொரு

மேலும்

madurai viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Apr-2019 2:51 pm

ஒரு நாள் நீ பிரிவை வேண்டினாய்
நான் மறுக்காமல் கொடுத்தேன்

ஒரு நாள் இதயம் வேண்டினாய்
அப்போதும் எனக்கு ஆட்சேபனையில்லை

உன் நினைவுகளை நிறுத்திவிடச்சொல்லி
நீ ஒன்றும் கூறவில்லை
அது பற்றி உனக்கு எந்த அக்கறையுமில்லை

நீ கவனித்துக்கொண்டேயிருந்தாய்
நான் என் பயணப்பையில் உன் புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொள்ளவேயில்லை
உனக்கு வருத்தமாக இருந்தது
நீ உடுத்திய ஆடையை கொடு உன் ஞாபர்த்தமாக எடுத்துச்செல்ல
என்றதும்
உன் முகத்தில் அவ்வளவு பூரிப்பு
இதற்குதானே இவ்வளவு நேரம் நடித்ததும்

எதையும் மறக்கவில்லையே என திரும்ப திரும்ப கேட்கும்வரை
எனக்கு புரியவில்லை
கடைசியாக உன் கிசுசிப்பான கு

மேலும்

madurai viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2019 2:17 pm

கடைந்தெடுத்தால்தான்
சில அமிழ்தம் கிடைக்கிறது
மனதை கடைந்து காதல் கிடைப்பது போல

மேகங்களை வெட்கமாகக்கொண்டு
வானம் அழகாகிறது
உனக்கு வெட்கமே தனி அழகாகிறது

உன்னிடம்
இயல்பாவே சில அழகுள்ளது
உன் அழகும் சிலசமயம்
இயல்பாகவுள்ளது

என் மனக்கோயிலில்
வீற்றிருக்கும் இறைவி நீ
எதைக்கொண்டு பூஜிப்பதென
தெரியாமல் கண்ணீரில் அபிஷேகம் செய்யும் பக்தன் நான்
நீ கல்லாகவே போனால்
ஒரு எளிய பக்தனைக்கொன்ற
பழிவிழும் உன்மேல்

சிற்பங்களெல்லாம் நளினமாய்
இருக்கின்றன
எனக்கு உயிருள்ள சிற்பம்தான்
ரொம்ப விருப்பம்
அதனால்தான் உன்னைக் காதலிக்கிறேன்

நீ போன வழியெங்கும்
சில இதயங்கள் வழிதவறி விடுகின்றன

உன்னை மேகமாக்கி

மேலும்

madurai viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2019 4:38 pm

நீ தேவதைகளின் ஏகக் கடவுள்
நான் ரொம்ப ஆடம்பரமில்லாத பக்தன்தான்

நேசத்தை ஆண்கள் தொடங்கி வைக்கிறார்கள்
அதை பெண்கள்தான் பிரிவில் முடித்து வைக்கிறார்கள்

உன் எடைக்கு எடை எதை கொடுப்பது
நீ காற்றைப்போல எடையற்றவள்
ஆனால் சுவாசிக்க ரொம்ப அவசியமானவள்

உன்னால் பட்டாம்பூச்சிகளுக்குள்
வன்முறை பெருகிவிட்டது
உன் கூந்தலை ஸ்பரிசிப்பது தங்களுக்குள் யாரென்ற
போட்டியில்

குழந்தைகளை கொஞ்சும் தேவதைகள்
ரொம்ப அழாகயிருக்கிறார்கள்
பெண்களுக்கு இதையெல்லாம் இவ்வளவு அம்சமாக செய்ய
யார் சொல்லி தருகிறார்கள்

என் இதயம் எங்கும் துளைகள்தான் இருக்கின்றன
உன் சொற்களால் அதில் கொஞ்சம் இசை ஏற்படுத்து

மேலும்

madurai viswa - madurai viswa அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2019 9:08 pm

கோயில் சிற்பங்கள் சில சமயம்
திசை மாறி விடுகின்றதாம்
எனக்கு தெரியும் அன்றெல்லாம்
நீ தரிசனம் பார்க்க சென்றிருப்பாய்

உன் அழகைப்பற்றி என்ன கூற
நான் என் வறுமையை உணர்வது
இதை விவரிக்க முடியாத போதுதான்

இந்த தெருவின் மரங்கள் கோடையிலும்
பூக்கள் தருகிறதாம்
நீ வசிக்கும் தெருவில் இதெல்லாம்
ஒரு அதிசயமா..?

உன் கொலுசு ஜதைகளின் ஓசை கேட்டதும்
எல்லா சன்னலிலும் தலை முளைக்கின்றன
நீ போகும் தெருவெல்லாம் கண்கள்
அலட்சியங்களின் வழியாவும் கர்வத்தை உணர்த்த
உன்னிடம்தான் பாடம் கேட்க வேண்டும்

இங்கிருக்கும் ஜவுளி கடைகளில்தான்
உன் ஆடைகள் வாங்கப்படுகிறது
நீ அணிந்த பிறகுதான்
அவைகளுக்

மேலும்

நன்றி.. 13-Apr-2019 11:53 am
ஒப்பனை இல்லாத இயல்பு வார்த்தைகளில்...மிளிர்கிறது தங்கள் வரிகள்...அற்புதமான படைப்பு 12-Apr-2019 11:30 pm
மேலும்...
கருத்துகள்
மேலே