கீதாவின் மகள் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கீதாவின் மகள்
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  29-Dec-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Feb-2019
பார்த்தவர்கள்:  129
புள்ளி:  29

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் சிறு வயது முதலே! எழுத்துக்கள் மூலம் நான் யார் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்... கீதாவின் மகள் என்று அவள் பெயரையும் சேர்த்து !!!!!

என் படைப்புகள்
கீதாவின் மகள் செய்திகள்
கீதாவின் மகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2019 5:50 pm

அழுக்கு சட்டையும்
அதற்கே உரிய கால்ச்சட்டையும்
அணிந்தவாறு அமர்ந்திருக்கும்
செருப்பு தைக்கும் தொழிலாளியின் வறுமை
வழியில் செல்வோரை வழிய வந்து
வரவேற்கிறது - ஆனால்
கால்மேல் கால்போட்டு அவர்
கம்பீரமாய் அமர்ந்திருந்த தோரணை
தனக்கு தான் முதலாளி என்ற
கர்வத்தை காட்டியது
முதலாளித்துவம் இல்லா முதலாளி

இவள்
கீதாவின் மகள்

மேலும்

கீதாவின் மகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2019 12:41 pm

பெண்களின் ஆடையில்
கட்டுப்பாடு விதிக்கும் ஆண்களே

பெண் என்பவள்
வெற்று உடல் அல்ல

உடல் என்பது
ஆன்மாவை பாதுகாக்க பயன்படும்
அற்ப கூடு

உயிர் இல்லையேல் அவள் / அவன்
உடலுக்கு மதிப்பில்லை

உமது காம இச்சைக்கு
கசக்கி எரிய பெண்கள்
இங்கு படைக்கப்படவில்லை

பெண்களின் ஆடைகளே
ஆண்களின் தவறுகளுக்கு
காரணம் எனில் - பெண்
சிசுக்களை சிதைப்பது ஏன்

பெண்களின் யோனி
உயிரினை பிறப்பிக்கிறது

பெண்களின் மார்புகள்
உயிர்களுக்கு உணவு வழங்குகிறது

இதை அறிந்தும் ஏனோ
ஆண்கள் அற்ப ஆசையில்
தொங்கப்போட்டு கொண்டு
அலைகிறார்கள் நாக்கினை

இனியொரு உலகம் படைக்கப்பட்டால்
அங்கு பெண்க

மேலும்

கீதாவின் மகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2019 5:51 pm

அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க வேண்டிய இயற்கை அன்னையின் வளங்களை, தமக்கு மட்டுமே உரியது என நினைத்து அளவின்றியும், அதன் அருமை அறியாமலும், அனுபவித்து பல கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு
தாரை வார்த்ததன் விளைவு. இன்று, குடங்களை தூக்கி கொண்டு தெருக்களில் நீர் இன்றி நிற்கும் அவலம்.

யோசிக்க தவறிவிட்டோம்
பணம் பெற்று ஓட்டினை
விற்றபொழுது

யோசிக்க தவறிவிட்டோம்
மரங்களை மதிக்காமல் வெட்டி
சாய்த்தபொழுது

தட்டி கேட்க தவறிவிட்டோம்
விவசாயிகளின் விளைநிலங்கள்
அநியாயமாய் பறிக்கப்பட்டபொழுது

செவி கொடுத்து கேட்க தவறிவிட்டோம்
நம்மாழ்வார் நம் எதிர்காலத்திற்காக
போர் கொடி தூக்கியபொழுது

மனிதம

மேலும்

கீதாவின் மகள் - கீதாவின் மகள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2019 6:24 pm

முழு வெண்ணிலவை பார்த்தேன்
களங்கமில்லா அவள் அழகில்
அப்படியே நின்றுவிட்டேன்

குட்டி குட்டி விரல்கள்
குண்டு குண்டு விழிகள்
விழித்து விழித்து பார்த்தாள்
வியந்துபோய் நின்றுவிட்டேன்

பெண்பிள்ளை பெற்றுவிட்டால்
மறுத்தாய் கிடைத்திடுவாள்

வேண்டாதா தெய்வமில்லை
பெண்பிள்ளை பிறப்பதற்கு

பிறந்துவிட்டாள் ஒளிச்சுடராய்
எம் தங்கையவள் தோற்றத்திலே

பொக்கிஷமாய் கிடைத்தவளை
பொத்தி பொத்தி பாதுக்காக்க
கடவுளவன் துணை நிற்பான்.


இவள்
கீதாவின் மகள்

மேலும்

நன்றி 14-Jun-2019 5:50 pm
அழகு படைப்பு 12-Jun-2019 12:03 pm
கீதாவின் மகள் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2019 6:24 pm

முழு வெண்ணிலவை பார்த்தேன்
களங்கமில்லா அவள் அழகில்
அப்படியே நின்றுவிட்டேன்

குட்டி குட்டி விரல்கள்
குண்டு குண்டு விழிகள்
விழித்து விழித்து பார்த்தாள்
வியந்துபோய் நின்றுவிட்டேன்

பெண்பிள்ளை பெற்றுவிட்டால்
மறுத்தாய் கிடைத்திடுவாள்

வேண்டாதா தெய்வமில்லை
பெண்பிள்ளை பிறப்பதற்கு

பிறந்துவிட்டாள் ஒளிச்சுடராய்
எம் தங்கையவள் தோற்றத்திலே

பொக்கிஷமாய் கிடைத்தவளை
பொத்தி பொத்தி பாதுக்காக்க
கடவுளவன் துணை நிற்பான்.


இவள்
கீதாவின் மகள்

மேலும்

நன்றி 14-Jun-2019 5:50 pm
அழகு படைப்பு 12-Jun-2019 12:03 pm
கீதாவின் மகள் - கீதாவின் மகள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2019 4:50 pm

பெண்களின் கருவறையை
ஒருமுறையேனும் ஆண்களுக்கு
படைக்கமாட்டானா படைத்தவன் ...

ஊழலை இவ்வுலகிற்கு அறிமுகம்
செய்ததே அவனாயிற்றே

ஆண் வர்க்கத்தில் சிலரை ஆதிக்கம்
செலுத்த அனுப்பிவைத்து – அனைத்திற்கும்
அடித்தளமிட்டதே அவன் என்பதை
மறந்து அவன் முன்னே மண்டியிடுகிறோம்

மனம் என்பது இருந்திருந்தால்
தன்னிலை மறந்து திரியும் நாசக்காரர்களை
நாசம் செய்திருக்க வேண்டுமே

அநியாயத்திற்கு அதிபதியாக இருக்க
ஆசை கொண்டுள்ளான் போலும்

ஈடு இணையில்லா சக்தி
இருப்பதால் நினைத்தையெல்லாம்
அநீதியாய் செய்யும் அதிபதிக்கே
அனைத்தும் வெளிச்சம் ......

இவள்
கீதாவின் மகள்

மேலும்

நன்றி 26-Mar-2019 6:03 pm
புதுமை -புரட்சி படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கியப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 25-Mar-2019 3:47 am
கீதாவின் மகள் - கீதாவின் மகள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2019 5:02 pm

ஒப்பனைகள் பல

மேலும்

நன்றிகள் பல நண்பரே 12-Mar-2019 3:17 pm
வணக்கம் ! கொஞ்சும் மழலைக் கோபம் போலே கொட்டும் கவிகள் தேனே - மனம் விஞ்சும் பொழுதில் விழிகள் நனைந்து வெட்கம் தொலையும் பிணைந்து ! அழகாய் உணர்வை எடுத்துச் சொன்னாய் ஆன்மா உள்ளும் இனிப்பு ! - இன்னும் எழுதிக் கொள்வாய் எடுத்துச் சொல்வாய் இளமை கொள்ளும் தவிப்பு ! 09-Mar-2019 6:11 pm
கீதாவின் மகள் - சொ பாஸ்கரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2018 5:39 pm

உறங்கும் உன்மகனின்
உறக்கத்தைக் கலைக்காதே
உறக்கம் கலையும்வரை
உறங்கட்டும் எழுப்பாதே

அல்லிவிழி அழகா லே
அமைதியாய் உறங்கட்டும்
சுமையில்லா உறக்கத்தால்
சொர்க்கத்தைக் காணட்டும்

சின்னஞ்சிறு மழலையவன்
சிறகில்லா பறவையவன்
சுமையறியும் காலம்வரை
இமைமூடித் தூங்கட்டும்

அறியாத வயதினிலே
அமைகின்ற உறக்கத்தை
அன்புள்ள கரத்தாலே
அணையிட்டுத் தடுக்காதே

பள்ளிசெலும் பருவத்திலே
பலபாடம் படிக்கையிலே
கண்ணுறங்க நினைத்தாலும்
கடமையதை தடுத்திடுமே

இப்போது விட்டுவிட்டால்
எப்போது உறங்குவது
வாலிபந்தான் வந்தபின்னே
வந்திடுமா இவ்வுறக்கம்

உறக்கம் கலைந்திந்த
உலகத்தைப்

மேலும்

அதி அற்புதம் சகோதரரே !!! நான் இதுவரை படித்ததில் இக்கவிதை ஒன்றே என்னை பெரிதும் ஈர்த்தது ... வாழ்த்துகள் 05-Mar-2019 3:14 pm
அருமையான படைப்பு நண்பரே! மகிழ்ந்தேன் 31-Aug-2018 3:31 am
நன்றி 27-Feb-2018 6:08 am
அழகான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Feb-2018 7:09 pm
கீதாவின் மகள் - கீதாவின் மகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2019 5:47 pm

கவி பாடுதல் 

கவி பாட நினைக்கும் கவிக் குயிலே
கவி பாடுதல் கடினமல்ல 
கண் சிமிட்டலும் கவிதையாகும் - உன் 
கண் சிமிட்டலும் கவிதையாகும் 
உன் கணவனுக்கு ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே