முதலாளித்துவம் இல்லா முதலாளி
அழுக்கு சட்டையும்
அதற்கே உரிய கால்ச்சட்டையும்
அணிந்தவாறு அமர்ந்திருக்கும்
செருப்பு தைக்கும் தொழிலாளியின் வறுமை
வழியில் செல்வோரை வழிய வந்து
வரவேற்கிறது - ஆனால்
கால்மேல் கால்போட்டு அவர்
கம்பீரமாய் அமர்ந்திருந்த தோரணை
தனக்கு தான் முதலாளி என்ற
கர்வத்தை காட்டியது
முதலாளித்துவம் இல்லா முதலாளி
இவள்
கீதாவின் மகள்