பொன்னு வெளஞ்ச பூமி
தங்கம் வெட்டிய
தங்க உள்ளங்கள் வாழும் ஊர்
உழைப்பாளிகள் கொண்ட ஊர்
அரசியல் நாகரிகம் கண்ட ஊர்
தீண்டாமை காணாத ஊர்
ரௌத்திரம் கற்று மறந்த ஊர்
பௌத்தம் கற்று மறக்காத ஊர் நாட்டுக்கு சேவை செய்யும் ஊர்
வீட்டுக்கு ஒரு பட்டதாரி உள்ள ஊர்
வட்டங்கள் தோறும் கோயில்கள் உள்ள ஊர்...
பள்ளிகளும்
பள்ளிவாசல்களும் நிறைந்த ஊர்... சமத்துவத்தில் சிகரம் தொட்ட ஊர்.... காக்கைக்கே ஒற்றுமை கற்றுதந்த ஊர்....
மானுக்கே மானம் சொல்லித்தந்த ஊர்...
அதர்மத்தை தட்டிகேட்க தயங்காத ஊர்...
சமதர்மத்தை நிலைநாட்டும்
சமத்துவ ஊர்...
அடுத்தவனின் துயர்துடைக்க
கரம் நீட்டும் ஊர்...
இது
பொன்னு விளைஞ்ச பூமி
நாங்கள்
உழைத்து பிழைக்க
ஊர் விட்டு
ஊர் போனாலும்
இரவில் உறங்க மடி தரும்
எங்க குலச்சாமி...
✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்...
.