காதல்
உந்தன் ஒரே பார்வை பாவையே
எந்தன் உள்ளத்தைக் காதல் கடலாய்
மாற்றியதே உந்தன் மீது நான்
இயற்றிய கவிதைகள் அக்கடலின் பேரலைகளாய்
மாறியதோ உன்னைத் தொடாது தொடுவதை
உணர்கின்றேன் நான் கற்பனையில்