தேடல்
தேடல்
சின்னத் திரை சீரியசா ஓடுது
சினிமாப் பாடலை சில்லரை மேயுது
சிறுசுகள் காண சிறுநேரம் கெஞ்சுது
சிக்கின துண்டு சீனெல்லாம் மாயுது. !
பட்ட துன்பம் படம் எடுக்க
படுத்த பாயும் பல்லவி பாடும்
பகிர்ந்த உண்மை பல்வினை வேய
பரிசல் வேண்டா பகமை வியக்க
உற்ற நண்பர் உணர்ந்து உதவ
உயரிய சிந்தனை உறங்கா தேடல்
உத்தமர் வரவு உருப்படி வைய
உறிமி மேளம் உறக்க கேட்க..
சிறுகச் சிறுக சேர்த்த பணம்
சிகரம் வியக்க சிந்தனை ஊர
சீராய் வாழி சீர்மிகு சுற்றம்
சீமான் பல்வார் சீதனம் ஏந்த !