கடற்கன்னி

அணைக்கையில் வழுகுது
அடுத்தப்பக்கம் நழுவுது
இகுத்துப்பிடித்து தடுத்தால்
இலகுவாய் நகருது
இருந்தும்கூட இடம்வலமாய்
இவனிடமே நெளியுது
இதயமுண்டா கடற்கன்னிக்கு
இருந்தால் இவனுக்கு அதில்
இடமுண்டா?
என்னுடனே எங்கெங்கும்
எடுத்துச்செல்ல ஏங்குகிறேன் ஏதும்
வழியுண்டா?