சொல் ஆடல் சொல்லாடல்
வெட்டாதே என்கிறது மரம்,
வெட்டுங்கள் என்கிறது குளம்;
ஒட்டாதே என்கின்றது சினம்
ஓட்டு என்கின்றது உறவு;
தடுக்காதே என்கின்றது நதி,
தடு என்கின்றது விதி;
பாடாதே என்கின்றது அனுபவம்
படுத்தாதே என்கின்றது அவமானம்;
தட்டாதே என்கிறது மனம்,
தட்ட மாட்டேன் என்கின்றது தன்நலம்;
தடுமாறாதே என்கின்றது தன்மானம்,
தட்டுங்கள் என்கின்றது தாளம்;
தட்டுவேன் என்கிறது குணம்,
தடுக்காதே என்கின்றது வீரம்,
தடுமாறாதே என்றது விவேகம்;
கொடுக்காதே என்றது வெட்கம்
கொடு என்றது உள்ளம்;
கொட்டாதே என்கின்றது கோபம்
கொட்டுவேன் என்கின்றது சினம்;
கட்டுவேன் என்கின்றது பாசம்
முட்டுவேன் என்கின்றது பகை;
முட்டாதே என்கிறது பாசம்;
கொத்துவேன் என்கின்றது இளமை;
தொத்துவேன் என்கின்றது முதுமை.
தொட்டால் ஒட்டுவேன் என்றது தீட்டு
சுட்டால் சுடுவேன் என்றது தீ
பார்த்தால் சீறுவேன் என்றது திட்டு.
பற்றாதே என்கிறது ஞானம்;
பற்றுவேன் என்கிறது மோகம்; பதறாதே என்றது அமைதி;
சிதறாதே என்றது நேசம்;
சிரிக்காதே என்றது கோபம்
சிந்திக்காதே யென்றது மடமை;
சந்திப்போமா என்றது சவால்,
சவால்விடு என்கின்றது
சண்டை;
சிந்திக்க வேண்டாம் என்று தடுக்குது தனிமை;
கெடுக்காதே என்கின்றது தருமம்;
கெடுத்துத் தொலை என்கின்றது கருவம்;
எடுக்காதே என்கின்றது நீதி;
எடுப்பேன் என்கின்றது அநீதி;
வாங்காதே என்கின்றது நேர்மை;
வாங்குவேன் என்கின்றது லஞ்சம்;
வாழாதே என்கின்றது பஞ்சம்
வாழ் என்கின்றது தஞ்சம்;
தூய்மை பேசுது சுத்தம்;
துர்நாற்றம் அடிக்கிது அசுத்தம்;
தாய்மை பேசுது தாயன்பு;
தவிக்கவே விடுது ஏக்கம்;
தாங்க வருது தூக்கம்
தள்ளியே நிற்க வைக்கிது தயக்கம்;
தள்ளியே விடுது மயக்கம்;
துள்ளிக் குதிக்குது உத்வேகம்
துள்ளியே ஓடுது வேகம்;
தூணாய் நிற்பது துணிவு;
தூண்டியே விடுது ஆசை;
நோண்டி பாக்குது கருவம்;
நொண்டியே பாக்குது கவனம்;
நொடியோ எடுக்குது ஓட்டம்
நொடிந்து போனால் வாட்டம்.
வேசம் போடுது நடிப்பு
வேடிக்கை காட்டுது பசப்பு;
வாடிக்கையாகுது பழக்க வழக்கம்
வாயடைக்க வைக்கிது குழப்பம்;
குடையிது வெறுப்பு
குடை பிடிக்கிது பொறுப்பு.