தண் டால் தண்டால் தண்டால்
தண்டால், தண்டால், தண்டால்!
@@@@@@@
என்னங்க பெரியவரே, நீதிமன்றத்தில ஒருவர் பேரை மூணு
தடவை கூப்படற மாதிரி "தண்டால், தண்டால், தண்டால்"ன்னு
மூணு தடவை சொன்னீங்க?
@@@@@
எம் பேரனைத் தான் கூப்புட்டேன்.
@@@@
உங்க பேரனைத் தண்டால் எடுக்கச் சொல்லிக்
கட்டாயப்படுத்தறீங்களா?
@@@@@@
அடப் போங்க தம்பி. நான் எதுக்கும் யாரையும் கட்டாயப்படுத்த
மாட்டேன். எம் பேரன் பேரு 'தண்டால்'.
@@@@@@@
உங்க பேரன் பேரு 'தண்டால்'லா? என்னங்க 'தண்டால்'னு உங்க
பேரனுக்குப் பேரு வச்சிருக்கறீங்க?
@@@@@@@@@@@@@@@@@
'தண்டால்'ன்னு பேரு வச்சா தப்பா?
@@@@@
சரி ஏன் அந்தப் பேரை உங்க பேரனுக்கு வச்சீங்க? அந்தப் பேரை
உங்க பேரனுக்கு வைக்கணுங்கிற ஆசை எப்படி வந்தது?
@@@@@@@@
தம்பி செய்தித்தாள்கள்ல 'ஜிண்டால்'னு அடிக்கடி
விளம்பரம் வர்றதை நீங்களும் பார்த்திருப்பீங்க. அதே மாதிரி
பேரை எங்க குடும்பத்தில் உள்ள எல்லோரும் எடுத்த முடிவு தான்
அந்தப் பேரு.எல்லாம் உங்களை மாதிரி தான் அந்தப் பேரைப்
பத்திக் கேட்டாங்க. நாங்க அந்தப் பேரு தமிழ் 'தண்டால்'
இல்லை. இந்தித் 'தண்டால்'னு சொன்னோம். அந்தப் பேரைக்
கேட்டவங்க எல்லாம் "தண்டால் ஸ்வீட் நேம்"னு சொன்னாங்க.
எங்களுக்கு அந்தப் பேரை வச்சது ரொம்பப் பெருமையா
இருக்குதுங்க தம்பி.
@@@@@@@@@@@
புதுமையான பேரா உங்க பேரனுக்கு வச்சிருக்கறீங்க. நிச்சயம்
பெருமையாத் தான் இருக்குமுங்க ஐயா.

