குபீர்னு சிரிக்கிறான்

பையனைப் பாருடி மருமகளே! எப்பிடி அழகா குபீர்னு

சிரிக்கிறான். அதுக்கு நான் வச்ச பேருதாண்டி காரணம்.

@@@@@

ஆமாங்க அத்தை.

@@@@@@@@

நான் சோசியர்கிட்டக் கேட்ட போது ஒரு புனிதமானவர் பேரை

வைக்கச் சொல்லிச் சொன்னாரு.



@@@@@

என்ன பேருங்க அத்தை.

@@@@@@@

'கபீர்' -ன்னு பேரு வைக்கச் சொன்னாருடி.

@@@@

ஏன் அந்தப் பேரை உங்க பேரனுக்கு வைக்கல?

@@@@@

அந்தப் பேருள்ள பையன் ஒருத்தன் நம்ம பக்கத்துத் தெருவில

இருக்கிறான். அந்தப் பேரு என் பேரன்னுக்கு வேண்டாம். ஆனால

அதே மாதிரி பேரு தான் வேணும்ன்னு சொன்னேன்.

@@@@@

அதுக்கு சோசியர் என்ன சொன்னார்?

@@@@@@@@

'கபீர்'ல இருக்கிற 'க'வுக்குப் பதிலா வேற எழுத்துப் போட்டு

அந்தப் பேரை உங்க பையனுக்கு வச்சிடுங்க. அது இந்திப்

பேருன்னு சொல்லிடுங்க. அந்தப் பேரைக் கேட்கிற மக்கள்

"ஸ்வீட் இந்தி நேம்"னு சொல்லுவாங்க. 'குபீர்'னு வைக்கலாம்னு

கேட்டேன். "'குபீர்' அருமையான பேரு அந்தப் பேரையே

வச்சிடுங்க"ன்னு சொன்னாரு.

@@@@@@

அத்தை நீங்க வச்ச பேரு உலகத் தமிழர்கள் யாரும் அவுங்க

பையனுக்கு வைக்காத அருமையான பேருங்க. நீங்க சொன்ன

மாதிரி உங்க பேரன் மூணு மாசத்திலயே குபீர்னு

சிரிக்கிறானுங்க அத்தை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Kabir = Great

எழுதியவர் : மலர் (11-Sep-25, 8:56 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 30

மேலே