இரு ஆமை
இரு ஆமை
என் உண்மை நிலவரம் அறியாது
எனக்கு விழா ஏற்பாடு
பெட்டுக்குள் அடைபட்ட என்னை
ஒரு பொருட்டாக கருதி
பாராட்ட முன் வந்ததிற்கு
இனிதே விரைவு நல்வாழ்த்து உங்களுக்கு
ஏனெனில்
பிறப்பில் மெது நடை
அளாது பிரியம் எனக்கு !
மண்ணும் வேணும் !
மணலும் வேணும் !
கடலும் வேணும்!
பயப்பட வெளியில் ஒன்றும் இல்லை
சுய பாதுகாப்பு என் கைவசம் !
கொடுத்து சிவந்த கை எனது
கட்டம் போட்ட பொழுதே இட்டது அது !
பொறுமையாக கேட்டால்
மெதுவாக புலப்பட வைப்பேன்
பல மைக்கு பலமானவன் !
மெது ஓட்டத்தின் நாயகன் நான் !
பாராபட்சத்தின் சேவகன் நான் !
துலாபாரம் சீராய் இருக்க
மூன்றெழுத்தை சரிகட்ட
இன்னேரு மையை கட்டி வைத்தேன் நண்பனாக..
வெளிப்படையாக வெளி தலைகாட்ட
என்னுடைய இயலாமை பளிச்சிடும் இப்போ
போருக்கு போகும் பொறாமை
அறிவை மதிக்கா அறியாமை
அதன் பலம் அறியும்….
துணிந்து செயல் படின்
என்னை எடுபடா கோட்டையுள்
நுழைவதை துடுக்க முடியும் …!
மீண்டும் நினைவு படுத்துகிறேன்
ஆமைக்கு அங்கீகாரம் வழங்கிய
இயலாமையும் இல்லாமையையும் கவனியுங்கள் !
பழமொழியை பல முறை உறுதியாக நினைவு கூறினேன்!
இயலாமையை சீர்செய்து
இனி எடுங்கள் மறுவிழா !
பொறாமை எனும் அறியாமையை விறட்டி அடிக்க …