பல்லார்முற் பேணாமை பேணுந் தகைய சிறிதெனினும் - சிறுபஞ்ச மூலம் 38

நேரிசை வெண்பா
(’ய்’ ‘ல்’ இடையின எதுகை)

பொய்யாமை நன்று பொருணன் றுயிர்நோவக்
கொல்லாமை நன்று கொழிக்குங்காற் - பல்லார்முற்
பேணாமை பேணுந் தகைய சிறிதெனினு
மாணாமை மாண்டார் மனம்! 38

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

பொய்சொல்லாதிருப்பது நன்மையாகும்.

தன் உழைப்பால் வரும்பொருள் நன்மையாகும்;

மற்றொரு உயிர் வருந்த கொல்லாதிருப்பது நன்மையாகும்;

ஆராயுமிடத்து, விரும்பத் தகாதவற்றை பலரறிய விரும்பாமை நன்மையாகும்;

மாட்சிமைப் பட்டவர்களுடைய மனம் சிறிதே என்றாலும் குடும்ப பந்தத்தில் தீவிர விருப்பப்படாமல் இருப்பது நன்மையாகும்;

(மாட்சிமைப் பட்டவர்களுடைய மனம் கொஞ்சமாவது பெருமையடையாமல் இருத்தல் நன்மை எனவும் கூறலாம்!)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Sep-25, 4:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே