பனிவாடாய் பண்டன்று பட்டினங் காப்பு - முத்தொள்ளாயிரம் 44

நேரிசை வெண்பா

நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத்
தாமரையும் நீலமுந் தைவந் – தியாமத்து
வண்டொன்று வந்தது வாரல் பனிவாடாய்
பண்டன்று பட்டினங் காப்பு!.44

- முத்தொள்ளாயிரம்’

பொருளுரை:

நலங்கிள்ளி அச்சம் தரும் வேலை உடையவன். அவனது சோழநாட்டில் வண்டு ஒன்று நள்ளிரவில் தாமரையிலும், நீல மலரிலும் தேனை உண்டு தடவிக் கொடுத்துவிட்டு வருகிறது.

குளிரும் வாடைக்காற்றே! நலங்கிள்ளி காவிரிப்பூம் பட்டினத்தைக் காப்பாற்றும் செயல் பண்டுபோல் எல்லாருக்கும் பாதுகாப்புத் தருவதாக இல்லை. எனவே நீ இங்கு வரவேண்டாம். | வாடைக்காற்று வீசாமல் இருக்கவேண்டும் என்று நயமாக வேண்டுகிறாள்.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (26-Sep-25, 4:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே