பெரியோரிடம் நடந்து கொள்ளும் முறை - ஆசாரக் கோவை 28

இன்னிசை சிந்தியல் வெண்பா

இருகையால் தண்ணீர் பருகா ரொருகையாற்
கொள்ளார் கொடாஅர் குரவர்க் கிருகை
சொறியா ருடம்பு மடுத்து! 28

- ஆசாரக் கோவை

பொருளுரை:

இரண்டு கைகளாலும் அள்ளித் தண்ணீர் குடிக்கக் கூடாது.

பெரியோர் கொடுக்கும் பொருளை ஒரு கையினால் வாங்கக் கூடாது.

பெரியோர்க்கு எப்பொருளையும் ஒரு கையால் கொடுக்கக் கூடாது.

இரண்டு கைகளையும் வைத்து உடம்பில் சொறியக் கூடாது.

கருத்துரை:

தண்ணீரை இரு கையாலும் குடிக்கலாகாது. பெரியோரிடம் ஒன்றைப் பெறும் பொழுதும், கொடுக்கும் பொழுதும் இரு கையாலேயே வாங்கவும் கொடுக்கவும் வேண்டும். உடம்பை இரு கைகளாலும் சொறியலாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-25, 9:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே