தப்பாது உலகம் தனையடிமை கொண்டவன் – நீதி வெண்பா 12

நேரிசை வெண்பா

ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான். 12

- நீதி வெண்பா

பொருளுரை:

ஆசைக்கு அடிமைப்பட்டவனே எல்லா உலகங்களுக்கும் குற்றமற்ற நல்ல அடிமையாவான். ஆசைதனைத் தனக்கு அடிமையாய்க் கொண்டவனே தவறாமல் உலகத்தைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டவன் ஆவான்.

கருத்து:

ஆசையில்லாதவனுக்கு உலகம் வசப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-25, 9:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

மேலே