தங்காத் தகைவண்டு பாண்முரலும், கானம் - கார் நாற்பது 29
இன்னிசை வெண்பா
பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன; தங்காத்
தகைவண்டு பாண்முரலும், கானம்; பகைகொண்டல்
எவ்வெத் திசைகளும் வந்தன்று; சேறும்நாம்,
செவ்வி உடைய சுரம்! 29
- கார் நாற்பது
பொருளுரை;
சோலைகளெல்லாம் பக்கங்களில் பூத்தன; காட்டின்கண்ணே தங்குதலின்றித் திரியும் அழகையுடைய வண்டுகள் இசைப்பாட்டைப் பாடாநின்றன; பகைத்தெழுந்த மேகம் எல்லாத் திசைக்கண்ணும் வந்தது; காடுகளும் தட்பமுடையவாயின; (ஆதலால்) நாம் செல்லக் கடவேம்!
பொங்கர் – இலவுமாம்; சேறும் என்றது நெஞ்சை உளப்படுத்தித் தேர்ப்பாகற்குக் கூறியதுமாம்.