மிக கொடிய மிருகம் மனிதன்

அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க வேண்டிய இயற்கை அன்னையின் வளங்களை, தமக்கு மட்டுமே உரியது என நினைத்து அளவின்றியும், அதன் அருமை அறியாமலும், அனுபவித்து பல கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு
தாரை வார்த்ததன் விளைவு. இன்று, குடங்களை தூக்கி கொண்டு தெருக்களில் நீர் இன்றி நிற்கும் அவலம்.

யோசிக்க தவறிவிட்டோம்
பணம் பெற்று ஓட்டினை
விற்றபொழுது

யோசிக்க தவறிவிட்டோம்
மரங்களை மதிக்காமல் வெட்டி
சாய்த்தபொழுது

தட்டி கேட்க தவறிவிட்டோம்
விவசாயிகளின் விளைநிலங்கள்
அநியாயமாய் பறிக்கப்பட்டபொழுது

செவி கொடுத்து கேட்க தவறிவிட்டோம்
நம்மாழ்வார் நம் எதிர்காலத்திற்காக
போர் கொடி தூக்கியபொழுது

மனிதம் மறந்து திரிந்ததன் விளைவு
நடுரோட்டில் உட்காரும் நிலை
குடிநீருக்காக

எப்பொழுது செவிகளை மூடி
நடப்பதை வேடிக்கை பார்க்க
துவங்கினோமோ - அன்று ஆரம்பித்தது
நமது அழிவு

நிச்சயம் இனியும் தொடரும்
தட்டி கேட்க தயங்கினால்
செவி மடுக்க மறுத்தால் - நாம்

அழிவது நம்முடைய பிழையால்
இயற்கையை மட்டுமே நம்பி
வாழும் பிற உயிர்களின் நிலையை
நினைத்து பாருங்கள்

இறைவன் படைத்த மிக
கொடிய மிருகம் மனிதன்

இவள்
கீதாவின் மகள்

எழுதியவர் : கீதாவின் மகள் (14-Jun-19, 5:51 pm)
சேர்த்தது : கீதாவின் மகள்
பார்வை : 244

மேலே