பெண் வெற்று உடல் அல்ல

பெண்களின் ஆடையில்
கட்டுப்பாடு விதிக்கும் ஆண்களே

பெண் என்பவள்
வெற்று உடல் அல்ல

உடல் என்பது
ஆன்மாவை பாதுகாக்க பயன்படும்
அற்ப கூடு

உயிர் இல்லையேல் அவள் / அவன்
உடலுக்கு மதிப்பில்லை

உமது காம இச்சைக்கு
கசக்கி எரிய பெண்கள்
இங்கு படைக்கப்படவில்லை

பெண்களின் ஆடைகளே
ஆண்களின் தவறுகளுக்கு
காரணம் எனில் - பெண்
சிசுக்களை சிதைப்பது ஏன்

பெண்களின் யோனி
உயிரினை பிறப்பிக்கிறது

பெண்களின் மார்புகள்
உயிர்களுக்கு உணவு வழங்குகிறது

இதை அறிந்தும் ஏனோ
ஆண்கள் அற்ப ஆசையில்
தொங்கப்போட்டு கொண்டு
அலைகிறார்கள் நாக்கினை

இனியொரு உலகம் படைக்கப்பட்டால்
அங்கு பெண்கள் மட்டுமே
வாசம் செய்யட்டும் - அதுவே
உலகை உலகாக இருக்க
உதவும்

இவள்
கீதாவின் மகள்

எழுதியவர் : கீதாவின் மக்கள் (19-Jun-19, 12:41 pm)
சேர்த்தது : கீதாவின் மகள்
பார்வை : 298

மேலே