கிளை
போய் வா என்
பூரண நம்பிக்கையே...!
செல்லும் இடமெங்கும்
நிலம் செழிக்கச் செய்யும்
நீர் வழி நதி போல...
நீ சென்ற இடமெல்லாம்
சிறக்கச் செய்வாய் இனி...
ஒப்பில்லா நறு மலரே
நீயின்றி இனி
உப்பில்லா வாழ்வே..
நினைவுகள் உள்ளவரை
பிரிவென்பதில்லை
உயிரோடு உள்ளவரை
உனக்கென்றே நான் இருப்பேன்
கிளைகள் பலவாயினும்
மரமென்பது ஒன்றே
கிளை விட்டு கிளை போனாலும்
மனமென்றும் ஒன்றே
நதி எங்கு போனாலும்
கடல் வந்து சேரும்
காத்திருப்பேன் நான் கடலாக
உடலெங்கும் நீயிட்ட
உப்பின் நன்றியோடு