வெள்ளூர் ராஜா - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : வெள்ளூர் ராஜா |
இடம் | : விருதுநகர் (மா) வெள்ளூர் |
பிறந்த தேதி | : 02-Jun-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 4765 |
புள்ளி | : 2037 |
விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் என்னும் சிறு கிராமம் சொந்த ஊர்...தற்போது பணியாற்றுவது சென்னையில்...நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை...நீர்ச்சுழியில் சிக்கிய சருகாக மனதில் உழலும் எண்ணங்களை எழுத்தாக்கும் முயற்சி...முயற்சி மட்டுமே... எழுதுவது வாசிக்கும் படி இருந்தால் மகிழ்வேன் இல்லையெனின் உங்களின் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும்..!
சுருண்டடையும் நத்தைகள்
என்றுமே வெளியேற விரும்புவதில்லை!
வேகும் புழுக்கத்திலும்,
கூட்டையும் சுமந்தே திரியும்!
வெளியேறும் பயமா?-இல்லை
வெளியுலகு பயமா?
அதை நாமாய் வகுத்தோம்
மெல்லுடலிகளென்று!
சிலநேரம் மென்கொல்லியாகக் கூட
இருக்கலாம்!-இல்லை
சுற்றத்தையும்
அரைத்து விழுங்கும்
விஸ்வரூபியாகக் கூட இருக்கலாம்!
ஏதோ ஒன்று-ஆனாலும்
சுமந்தே திரிகிறது
இறக்கிவைக்க வழியற்று!!!
தினமும் பசங்க கதை சொல்ல சொல்லி நச்சரிக்கும் போது ( தினம் தினம் கதைக்கு எங்க போறது பாஸு.. ) சின்ன கதை வேணுமா பெரிய கதை வேணுமான்னு கேட்பேன்.
சின்ன கதை :
--------------------
ஒரு ஊர்ல ஒரு குளம் இருந்துச்சாம். அதில இரண்டு வாத்து இருந்துச்சாம். ஒரு வாத்து பேரு போதுமாம். இன்னொரு வாத்து பேரு மறுபடியுமாம். இப்போ மறுபடியும் கிற வாத்து தண்ணிக்குள்ள முங்கிடுச்சுனா மீதம் என்ன இருக்கும் னு கேட்கணும். பசங்க 'போதும்னு ' சொல்வாங்களா அப்போ போய் படுங்கனு சொல்லிடனும்.
பெரிய கதை:
-------------------
மேல சொன்ன கதைல இப்போ முங்க வேண்டிய வாத்து 'போதும்' கிற வாத்து. இப்போ மீதம் என்ன இருக்குனு கேக்கணும் மற
போய் வா என்
பூரண நம்பிக்கையே...!
செல்லும் இடமெங்கும்
நிலம் செழிக்கச் செய்யும்
நீர் வழி நதி போல...
நீ சென்ற இடமெல்லாம்
சிறக்கச் செய்வாய் இனி...
ஒப்பில்லா நறு மலரே
நீயின்றி இனி
உப்பில்லா வாழ்வே..
நினைவுகள் உள்ளவரை
பிரிவென்பதில்லை
உயிரோடு உள்ளவரை
உனக்கென்றே நான் இருப்பேன்
கிளைகள் பலவாயினும்
மரமென்பது ஒன்றே
கிளை விட்டு கிளை போனாலும்
மனமென்றும் ஒன்றே
நதி எங்கு போனாலும்
கடல் வந்து சேரும்
காத்திருப்பேன் நான் கடலாக
உடலெங்கும் நீயிட்ட
உப்பின் நன்றியோடு
இழந்தவை யாவும்
இரு மடங்காக கிடைக்கும்
இழந்த இடத்திலிருந்தே...
அதுவரை மனமே ...
அமைதியாயிரு...!
முதன் முதலாய்
கடல் பார்த்ததும்
முதன் முதலாய்
யானையைப் பார்த்ததும்
முதன் முதலாய்
உன் கண்களை பார்த்ததும்
சலிக்கவே இல்லை இன்னமும்
ஆகாய விமானம் பார்த்த
சிறு பிள்ளையின் வியப்போடு..!
எழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?
நான் யாரும் இல்லாத திண்டின் மீது அமர்ந்தாலும் அங்கு அமைதி இல்லை காரணம் அவள் என் அருகில் இல்லை
உனக்கு என்னைப் பிடித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
திரும்பிப் பார்த்து இருக்க மாட்டாய்..!
நீ என்னை நேசித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
எனக்குப் பிடிக்கும் என்பதற்காக
பச்சைத் தாவணியில் திருவிழாவிற்கு
வந்திருக்க மாட்டாய்..!
உனக்கு என்னிடம் பாசம் இருந்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
நான் பட்டினி கிடந்த போது
உன் வீட்டுப் பலகாரம்
கொடுத்தனுப்பியிருக்க மாட்டாய்..!
உனக்கு என்னிடம்
காதல் இருந்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
ஈரம் கசிந்த விழிகளோடு
உன் திருமண அழைப்பிதழை
கொடுத்திருக்க மாட்டாய்..!
உனக்கு என்னை
நிச்சயம் பிடித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
உன் கு
தாய்முகம் பார்த்து அழுதிடுமே சிற்சமயம்
வாய்விட்டு கொட்டிச் சிரிக்குமே - போயொருத்தர்
வாவென்று கூப்பிட்டால் வாராது ஆதலினால்
மாமழைக்கு நேராம் சிசு .
பொருள் : மழையானது பூமித்தாய் முகம் பார்த்து பெய்யும் ; குழந்தையோ பசிவந்த போதில் தாயின் முகம் பார்த்து அழும் . சில சமயங்களில் மேகத்தில் மின்னல்வெட்டி இடி இடிக்கும் ; அது மேகங்கள் சிரிப்பதுபோல் தோன்றும் . குழந்தையும் பசி அடங்கிவிட்டால் கைகொட்டி , வாய்விட்டு சிரிக்கும். மழையானது " வா " என்று கூப்பிட்டால் வாராது .; அதுபோல வேற்று மனிதர்கள் கூப்பிட்டால் குழந்தை அவர்களிடம் போகாது . ஆகவே மழையும் குழந்தையும் ஒன்றென்று கூறு .
விருத்தங்கள் விளையாடும் தமிழின் சோலை
வித்தகர்கள் எழில்யாப்பில் கட்டும் மாலை !
விஞ்சையரும் வண்ணமுடன் சொல்லும் பாட்டு
விருந்தாகச், சொக்கிவிடும் உள்ளம் கேட்டு !
விதைத்திட்டார் மாவரதன் மரபை நன்றாய்
விருட்சமென வளர்ந்ததுவும் பூக்கும் செண்டாய் !
வியக்கவைக்கும் திறமைகளும் இங்கே கூடும்
விருந்தளிக்கக் கருத்தாகச் சேர்ந்தே பாடும் !
விவரித்துக் கற்பிக்கும் ஆசான் பாட்டை
வியனுலகும் சுவைத்திடவே ஆர்வம் காட்டும் !
விமர்சனமும் சிலநேரம் இங்கே முட்டும்
விடைகிடைக்கும் அதன்பின்னே தெளிவும் கிட்டும் ..!!
அருவியென வெண்பாக்கள் அமுதாய்ச் சிந்தும்
அதிமதுர கலிப்பாவும் புலவோர் சொந்தம் !
அந்தமில்லா ஒண்ட
மழைச் சேறாகி
வழிகிறது மனம்.
இரவின் இடைவெளிகளில்
சூழும் சொல்...
வழி தவறிய குழந்தையாகி
கரையும் நிலவோடு
பேசிக் கொண்டிருக்கிறது.
இடையில்...
விழிப் பந்துகளில்
விளையும் அதிர்ந்த மௌனம்
தான் அறியாத
உனது முகவரியின் தூரங்களில்
அலைந்து கொண்டிருக்கிறது.
விரியாத என் சிறகுகளோ
நடைபாதை நழுவி
மௌனத்தின்
தனிமைக் குகைக்குள்
நிழல் தேடிப் பதுங்குகிறது.
இடையறா
இச் சூழலில்
அமைதி விலகும் உணர்வுகளால்
மழைச் சேறாகி வழிகிறது மனம்.
#யாதுமாகி நின்றாய்..!
ஈரைந்து மாதங்கள் இடைதாங்கி என்னை
உயிருக்குள் உயிரென்றே காத்தாள் என் அன்னை
உதிரமும் பாலாக்கி ஊட்டினாள் - தாயும்
தெய்வம்தான் நான் பணிவேன் அவள்தாள்..! (18)
கண் துஞ்சாமலே தான் என்னை காப்பாள்
செவிலியாகவே மாறி பிணி தீர்ப்பாள்
இரவென்றும் பகலென்றும் இல்லை - தாயின்
சேவை எக்காலமும் காண்பான் இப்பிள்ளை (35)
பள்ளி செல்கையில் குருவானாள் - நித்தம்
பாடம் பகன்றுமே ஞானம் வளர்த்தாள்
வாழ்வினில் ஏற்றிடும் ஏணி - நானும்
கரை சேர்ந்திட ஆகினாள் நல் தோணி (52)
புத்திமதி சொல்லும் போதிலே
அவள் போதி மரமென்றே ஆகினாள்
துயர் வந்து சோர்ந்திடும் நேரம் - வேதனை
தீர்த்திடும் தோழனு