தி ராமராஜன் தமிழ் கவிஞன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தி ராமராஜன் தமிழ் கவிஞன் |
இடம் | : மேற்பனைக்காடு(மேற்கு) அறந |
பிறந்த தேதி | : 02-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 125 |
புள்ளி | : 1 |
தமிழ் கவிதை பிடிக்கும்
பொழுது கழியும்
பாவை பார்வை கழியுமோ ?
வளர்வதும் தேய்வது நிலவு
நீளுவதோ.... காதல் நினைவு
நினைவுகள் கோர்த்த கனவு
இல்லையே ...ஓர் முடிவு
காதல் !
முடிவற்ற தொடர்கதை
கருவுற்ற கற்பனை கதை
வானம் மண்ணுக்குள்ளும்
பூலோகம் விண்ணுக்குள்ளும்
கவிக்கெட்டா கற்பனை
காதல் மனதுக்குள்ளும்
தூங்காமல் துள்ளும்
சிறகு முளைக்கும்
வானம் தாண்ட துடிக்கும்
பார்த்த இடமெல்லாம்
பட்டாம்பூச்சி பறக்கும்
பாட்டு குயிலை மிஞ்சும்
ஆடும் மயிலும் கெஞ்சும்
கற்பனை கவியை விஞ்சும்
இது காதல் கீதம்
வாழ்வின் வேதம்
கடல் முன்னே உன் காந்த பார்வை பட்டவுடன் கவிதை பொளிகிறது அலை இசையாக ...
கடல் அழகை கண்டு இரசித்து நின்றேன் என் மீது அலை மோதி திரும்பிய போது வலி கொண்டேன் இதயத்தில் அலை போல என் இதயத்தில் மோதி சென்ற நான் தொலைத்த காதல் கவிதை நீ தானே!
காயம் பேசுகிறது எனக்கு கிடைத்த இடம் தோற்றவர்களின் இதயத்தில் மட்டும் என் இதயம் பேசுகிறது என் இதயத்தில் காயம் அவள்...
எழுத்தாணி எடுத்தேனே! எழுதத்தான் பார்த்தேனே! காகிதம் நனைந்ததடி அதனால கவிதை எழுத முடியலையே,உன் பிரிவால வலிக்குதடி என் நெஞ்சம் ,காகிதம் காயும் வறை காத்திருந்தேன் காகிதம் காயலையே என் கண் இரண்டும் கசங்குதடி....