காதல் கீதம்

பொழுது கழியும்
பாவை பார்வை கழியுமோ ?

வளர்வதும் தேய்வது நிலவு
நீளுவதோ.... காதல் நினைவு
நினைவுகள் கோர்த்த கனவு
இல்லையே ...ஓர் முடிவு


காதல் !
முடிவற்ற தொடர்கதை
கருவுற்ற கற்பனை கதை

வானம் மண்ணுக்குள்ளும்
பூலோகம் விண்ணுக்குள்ளும்
கவிக்கெட்டா கற்பனை
காதல் மனதுக்குள்ளும்
தூங்காமல் துள்ளும்

சிறகு முளைக்கும்
வானம் தாண்ட துடிக்கும்

பார்த்த இடமெல்லாம்
பட்டாம்பூச்சி பறக்கும்

பாட்டு குயிலை மிஞ்சும்
ஆடும் மயிலும் கெஞ்சும்
கற்பனை கவியை விஞ்சும்

இது காதல் கீதம்
வாழ்வின் வேதம்

எழுதியவர் : hums (17-Mar-20, 10:42 pm)
பார்வை : 170

மேலே