தேனிலவு
அரை நிலவில்
உன்னை முழுநிலவாய்
பார்த்தேன் ..
என் அடி மனதில்
உன்னை பார்த்தவுடன்
அடி வானமாய்
சிவந்தேன்...
என் பார்வையிலே
உன் கண்கள் இரண்டும்
என் இதயத்தை
தூண்டில் போட்டு
இழுக்குதே....
நீ முகம் கழுவும்
கன்மாயும் பசலை யில்லா
பவுர்ணமியாய் சொலிக்குதே....
உன் முகம் பார்க்கும்
என் கண்கள் ரெண்டும்
அதன் மீது குதிக்குதே...
நீ நடந்து
எனை நோக்கி
வருகையிலே
என் தோள் இரண்டும்
மயில் தோகையாய்
உன்னைபார்த்து விரிக்குதே...
உன்னை பார்த்து
என் தேகம் முழுதும்
சிலிர்த்தேன்..
கொஞ்சம் சிவந்தேன்
நீ தான்
என் முழு நிலவென்று...
அதனாலே
என் இராப்பொழுதும்
உன் மடிமீது கழிந்ததே
நம் காதலுக்கு
வின் மீனும்
துணையாக யிருந்ததே...
என் வாழ்வில்
நீ!- தினையாக
உன் வாழ்வில்
நான் தேனாக
இருப்போமா -அந்த
தேனிலவைப் பார்ப்பதற்க்கு
இன்னும் சில நாளில்
செல்வோமா?
நீ பதில் சொல்
என் சினேகதியே...
செல்வோம்! வெல்வோம்
நம் காதலை
சகதியில்லா சாதியில
திருமணம் செய்வோம்
ஒரு நன் நாளிலே.
தானே தந்தனோம் தன்னானே
நானே நன்தனோம் நன்நானே
காதலை வெல்வோம் யெலெலோ
கவிமழை பாடுவோம் தில்லெலோ
கவிமழை பாடுவோம் தில்லெலோ.
.