எம்ஜிஆர் நினைவு தினக் கவிதை
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
*எம் ஜி ஆர் நினைவு*
*தினக்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
இலங்கையிலிருந்து
அகதியாக
தமிழ்நாட்டிற்கு
நீ வாழ வந்ததாக நினைத்தார்கள் தமிழ்நாட்டையே
வாழவைக்க வந்தவர் என்று
யாரும் நினைத்தார் இல்லை....
வாழ்க்கையில் தான்
வறுமை இருக்கும்
உனக்குத்தான்
வறுமையே !
வாழ்க்கையாக இருந்தது...
வயிற்றைக் கழுவுத்தான்
மேடை நாடக வாய்ப்பு
கிடைத்ததாக நீயே !
நினைத்திருப்பாய்.....
நாளை
நீ ஏற வேண்டிய மேடை
நிறைய இருக்கும் என்று
அது காலம் பார்த்த
ஒத்திகை என்று
கடைசியில் தான் தெரிந்தது....
எல்லோரும் பிறந்ததால்
நடித்தார்கள்
நீதான் நடிப்பதற்காகவே
பிறந்தாய்.....
பிரிக்க முடியாதது
வறுமையும் புலமையும்
மட்டுமல்ல
வறுமையும் திறமையும் என்று
உன் வாழ்க்கை
கன்னத்தில் அறைந்து
சொல்லி இருக்கிறது....
ஏவிஎம் ஸ்டுடியோவில்
எடுபிடி வேலையில் சேர்ந்து
சத்யா ஸ்டுடியோவிற்கு
எஜமான் ஆன போது தான்
தெரிந்தது
உலகமே கைவிட்டாலும்
உழைப்பு
ஒரு நாளும் கைவிடாது என்று...
பலரும் வாய்ப்புக்காக காத்திருப்பார்கள்
முதல் முறையாக
வெள்ளித்திரையில்
வாய்ப்பு
உனக்காகக் காத்திருந்தது....
தோல்வி தான்
வெற்றிக்கு முதல் படி என்பார்கள்
அந்த பொன்மொழியை நீ பொய்யாக்கிவிட்டாய்
ஆம் ....
நீதான் தோற்காமலேயே
எல்லாவற்றிலும்
வெற்றி பெற்று விட்டாய்....
உன்னுடைய
படங்கள் எல்லாம்
மக்களுக்கு
ஒரு "பாடமாக" இருந்தது
அதனால் தான்
உன்னை
"வாத்தியார்" என்று
அழைத்தார்களோ ?
நடிக்க வந்ததால்
எல்லோராலும்
வீடு சொத்து தான்
வாங்க முடிந்தது
உன்னால் மட்டும்தான்
"தமிழ்நாட்டையே!"
வாங்க முடிந்தது ....
அண்ணாவின்
"இதயக்கனியாக"
அரசியலுக்கு வந்தாய்
ஏழைகளுக்கு
"எட்டும் கனியாக"
நீ இருந்ததால்
எளிதாக தமிழ்நாட்டின்
முலமைச்சர் ஆனாய்....
அரசியல்
புனித வாழ்க்கையானதால்
இல்வாழ்க்கை
இல்லாமல் போனது....
"ஒன்றை இழந்து தான்
ஒன்றை பெற முடியும்" என்பது
உன் வாழ்க்கையில் மூலம்
மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது...
எம் ஆர் ராதா
சுடுவது போல்
நடிக்கும் காட்சியில்
உண்மையாகவே
உன்னை
சுட்டதிலிருந்து தெரிகிறது
உன் புகழ்
எவ்வளவு உயரத்துக்கு
பரவியிருந்தது என்பது....
நாயாக பேயாக அலைந்து
தேர்தல் பிரச்சாரம்
செய்தாலே
தோற்றுப் போகும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்
அமெரிக்கா மருத்துவமனையில்
படுத்து கொண்டே !
தேர்தலில்
நீ வெற்றி பெற்றதிலிருந்து
நன்றாக தெரிகிறது
மக்கள் மனதில்
நீ எவ்வளவு ஆழத்தில் இறங்கியிருக்கிறார் என்று...
பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்
என்பார்கள்
உனக்குத்தான்
பசி பத்தையும்
உணர செய்திருந்தது...
இல்லை என்றால்
மதிய உணவுத் திட்டத்திற்கு
காமராஜர் போட்ட
சட்ட கையெழுத்துக்கு
தமிழ்நாட்டு பள்ளி அனைத்திலும்
அதை
நடைமுறைப்படுத்திருப்பாயா?
இதுவரை
இறந்த வீடு தான்
எழவு வீடாக இருந்திருக்கிறது
நீ இறந்த போது தான்
"தமிழ்நாடே!" எழவு வீடானது....
எல்லா தலைவர்களும்
இறந்தபோது
மக்களும்
தொண்டர்களும்
"கண்ணீர்" தான் விட்டார்கள்
நீ இறந்த போது தான்
"உயிரையே"! விட்டார்கள் .......
கதரி அழுக காட்சி
கல் மனதையும் கரைத்ததே!
காட்டாராய் வந்த கண்ணீர்
முக்கடலையும் நிறைத்தே!
உன் இறுதி ஊர்வலத்திற்கு
வந்த கூட்டம்
அந்த இறைவன்
ஊர்வலத்திற்கும் வந்திருக்காது...
வாழ்க உனது புகழ்.....!
வளர்க உனது பெருமை...!
*கவிதை_ரசிகன்*
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱