பொங்கல் திருநாள்
பொங்கலோ பொங்கல் கேயென்னார்
காலை கதிரவனைக் வானில் கண்ணால் கண்டவுடன்
கடுமையான உழைப்புடன் கதிரவன் கண் பார்வையால்
விளைந்த கதிர் கட்டுகளை களை களைந்து எடுத்து வந்து
காணிக்கையாக்கி புதுப்பானையில் கொட்டி வைத்து
பொங்கிவரும் நெற் கதிரின் நுரையினை கண்டவுடன்
பொங்கலோ பொங்கல் எனக்கூவி புதுப் பானையில் படைத்து
எங்கும் இன்பம் பொங்கிட எதிலும் இனிமையைக் கண்டு
எப்பொழுதும் பொறுமையுடன் அருமையாய் வாழ்ந்திட
எல்லோரும் இன்பமாய் இளமையுடன் வாழ்க்கையை நடத்திட
எழுச்சிகள் அடங்கி முடிவு பெற்று எங்கும் அமைதி வளர்ந்திட
எந்நாளும் ஏர் பிடிக்கும் உலகம் வாழ்க என வாயார வாழ்த்தி
பொங்கல் இட்டு பொய்யறியா பகலவனை போற்றிடுவோம்.