நன்மதி வெண்பா - நூல் - பாடல் 79
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
கயவர்க்கு நேர்துன்பங் காதலித்துத் தீர்ப்போர்
துயருறுவர் என்ற துணிபாம் - உயரனலிற்
பட்டுவருந் துந்தேளைப் பாலிப்போர் தம்மையது
கொட்டுமென்று நன்மதியே கூறு! 79