பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

அதிகாலை பொழுதில் செங்கதிர் வானை வர்ணமயமாக்கிட
ஆதவனும் உதயமானான் தங்கத்தட்டு போல தகதகவென
இல்லத்தில் உள்ள அனைவரும் புத்தாடை புனைந்து
ஈடுயிணை இல்லாத பகலவனைக் கொண்டாடிட
உவகையோடு களை எடுத்த புதுக்கதிர்களை நெல்லாக்கி
ஊரறியும் விதமாக வாசலில் கோலமிட்டு அடுப்பு வைத்து
எழில்மிகு விதமாக புதுப்பானையில் மஞ்சள் கிழங்கு கட்டி
ஏர் பிடித்த கைகளால் அரிசியை பானையில் பொங்கவைத்து
ஐயமில்லா மனதோடு கதிரவனை வணங்கி பொங்கலைப் படைத்து
ஒவ்வொரு நாளும் உழைத்ததற்கு பலன் என மகிழ்ந்து நன்றிகூறி
ஓசையோடுபொங்கலோ பொங்கல் எனக்களிப்புடன் கொண்டாடி
பொய்யறியா பகலவனைக் வணங்கி உழவர்களையும்
வாழ்த்திடுவோம்

எழுதியவர் : கே என் ராம் (13-Jan-25, 6:47 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : pongalo pongal
பார்வை : 32

மேலே