இராஅரிகிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : இராஅரிகிருஷ்ணன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Dec-2019 |
பார்த்தவர்கள் | : 499 |
புள்ளி | : 98 |
நூலகராக பணிபுரிந்து வருகிறேன். வாசிப்பை சமுகம் புரிந்து கொள்ள யோசித்து வருகிறேன்.
காலச்சக்கரத்தில்
சுழன்று வந்த
கூட்டுவண்டி நாம்...
காக்கிடவுசரை
தபால்பெட்டியாக்கி
வெள்ளச்சட்டையில்
மை அடித்து...
சிம்மி நாய்க்கு
சிகை அலங்காரம்
செய்து...
டைகர் நாய்க்கு
டவுசர்போட்டு
சின்னாத்து
தண்ணியில
பானைபிரி மீன்பிடித்து...
நம் ஆத்து
தண்ணியில
அரைநீச்சல் பழகி....
ஆத்தோரம்
சம்மாதி அதனோரம்
நாணல்தட்டை....
காற்றடித்து
சாய்ந்தபோது
கண்கலங்கி
பரிதவித்தோம்...
தைமாத
பொங்களிலே
நாணல் தட்டை
பீப்பிசெய்து....
நம்ம ஊரு
தெருவுல
தெருக்கூத்து
நடத்திவந்தோம்....
உன்பாட்டி இராஜானு
உன்னை கூப்பிட
மந்திரியாய் நானும்
வந்தேன்.....
பள்ளிக்கு
கிளம்பும
கொத்தும் குலையாய்
தெரியுது
கெத்துகாட்டி
திரியுது
மொட்டக் கேணி
பொந்துல
காமம் தணித்த பறவைபோல்
எச்சம் தொச்சம்
தெரிந்தும்
எதுவும் தெரியா
மழலையாய்
இளசுகள் ஏங்கும்
பதுமையாய்
பணத்தை பதுக்கும்
காலப்'பரத்தை'
பலதையும் மறந்து
பலறையும் பிரிந்து
அந்தப்புரத்து அரசியாய்
அயல்தேச அழகியாய்
ஆலமர நிலல் தேடி
கண்மாய்க்கரை
போகையில்
கொல்லநெச்சி பிள்ளையாரும்
கொழுக்கட்டை நீட்ட
கள்ளப் புன்னகையில்
கடவுளை தொழுதால்
யாதும் அறியா
மங்கை நான்
நெஞ்சில் ஈரமிருந்தும்
வாழ்வில் பரத்தையென்னும்
வடுக்கல் மறையவில்லை
பரம்பொருளே யென்று.
இடை சுறுங்கிய
ரெட்டைமுக
தேவதுந்துமியாய்.....
தாழி கட்டிய
தாரத்திற்கும்
தொப்புள் கொடி
அறுத்த தாய்க்கும்....
இராஜ கம்பள
இன்னிசை வெண்பாவாய்
துதிபாடி வலம்வருகிறான்.....
இல்லற வாசலில்
புண்ணகை பூ பூக்கும்
மாக்கோலம் மத்தியில்
அரசானி பூவில்
ரீங்காரமிடும் வண்டைபோல....
இராஜ கம்பளத்து
தேவதுந்துமியை
புகழ்பாடும் தேவர்கள்போல
உற்றாரும்..சுற்றாரும்
வாழ்த்து மழைபொழிய
வானத்து இளம்பரிதியாய்
ஒளிவீசி வாழ்ந்துவரும்
இல்லற ஆதியன்.
மூச்சு காற்றையே
காசாக்கி இரசிக்கிறான்
பலுன்காரன்....
அந்தரத்தில் ஆடிக்கொண்டு
கையேந்தும் வித்தைக்காரனாய்
ஆடிக்காற்றிலே
பறந்து கொண்டே
பறக்கிறது வண்ண பலூன்கள்...
பறக்கின்ற
பலுனுக்கும் தெரியாது
பறக்கவிடும் குழந்தைக்கும்
புரியாது
காட்டேரி மலைமேலே
கருப்புவந்து
காவுவாங்குமென்று....
வெடித்த பலுன்
துகள்கள்
நெஞ்சில் வந்து விழும்போது
காலச் சூழலிலே
மூவர்ண கொடிபோர்த்தி
வெடித்த பலுன்
துகள்களை
ஆகாய விமானத்தில்
சல்யூட் அடித்து அனுப்பி வைக்கிறோம்...
காற்றிலே
ஒரு இசைகீதம்
சோகமாய் வந்துவிழ
சாஹே ...சஹச்சா அச்சா....
குன்னூரு போகையில
காட்டேரி கவுத்துட்டா
காற்றடைத்த பலுனூம் கற்பப்பையாய் வெடித்திற்றே ......
மழைவிட்ட
பொழுதில்
தோகை விரிக்கும்
வண்ண மயில்போல ...
விண்ணில்
காற்றோடு
பறக்கும்
வண்ண
துப்பட்டா
வானவில்லாய்
தோன்றி மறையுதே.
அறுங்கோண பந்தில்
ஆறு வித வண்ணங்கள்
பாதங்கல் உந்தித் தல்ல
கால்பந்தோ நான்கு
திசையிலும் நையாண்டி
ஆட்டம் ஆடுகிறது
எதிர் எதிர் திசையில்
ஓடி ஒழிந்து
மேலே எழுந்து
நேர் கோட்டிலோ
சாய்வு கோட்டிலோ
உதைபட்டு இலக்கை
அடையுது
இலக்கின் வட்டத்திற்க்கு
வெளியே பந்தை தடுப்பதால்
எதிர் அணியின்
சூழ்ச்சியை முறியடிக்கும்
கோல்கீபர் போல
வாழ்க்கையின் இலக்கை
பூமிப்பந்தில்
லாவகமாக கையாலும்
மனிதன்
உதை பந்தின்
மேனியைப்போல
காட்சி தந்தாலும்
கடவுளின் ஆசியைப்
பெருகிறான்.
மெழுகு வர்த்தியின்
மெல்லிய வெளிச்சத்தில்
துளிர்த்த காதல்
புயலைப்போல கர்ஜ்ஜனை ...
மரங்களைப்போல சாய்ந்துகிடந்தன
ஈரப்பதமாய் நினைவுகள்....
மரங்களை கட்டித்தழுவிய
காற்றைப்போல இனைந்து
சிரித்தன இளசுகள்.