அலையை இரசிக்கும் ஜோடிகளே
நண்டு வந்து வந்து
கரை சேர முயலும்போது
அலை வந்து வந்து
இழுத்துச்செல்கிறதே.......
அலையை இரசிக்கும்
ஜோடிகளே!
உங்களைப் போல
அந்த நண்டினையும்
அதன் ஜோடியுடன்
சேர்த்து வையுங்களே !
உங்கள் கனவுகள்
கடற்கரையில்
கலங்கரை விளக்காய்
ஜொலிப்பது போல
அதன் கனவுகளும்
கடற்கரை மணலில்
கால் தடம் பாதிக்கட்டுமே !