மழையில் நனையும் ஜோடி

மழையில் நனையும் குடையைப்போல
நெஞ்சம் நனையுதே....


பூவின்
மொட்டைத் தொட்டு
மெட்டுப்போடும் காற்றைப்போலவே
உந்தன் காதல்
நெஞ்சை தொட்டு
இசையை மீட்டுதே...
இசையை மீட்டுதே...

மின்னல் வெட்டில்
பூத்த காதல்
நெஞ்சை தொட்டு
சாய்ந்து ஆடுதே....
சாய்ந்து ஆடுதே.....

மயிலைப் போன்ற
உந்தன் அழகை
பார்க்கத் தானே
என் நெஞ்சம் வாடுதே

சாரக் காற்றில்
சாரல் மழையில்
நெஞ்சம் குதிக்குதே
உன் உதடு சொன்ன
அந்த வார்த்தை
என் உள்ளத்திலே
துள்ளிக் குதிக்குதே....

காதல் என்னும்
காந்தத்திலே
உன் சொற்கள்
என் நெஞ்சில்-வந்து ஒட்டுக்கொள்ளுதே....

என்னை தேடும்
மானைப்போல
நீயும் வாடுறாய்
உன்னைத் தேடும்
மயில்போல நானும்
எங்குறேன்....

ரெண்டு பேரும்
இனையும் போது
இதயக் கதவு
திறக்குமே

நீயும் நானும்
வாழும்போது
கொங்கு நாடும்
மெச்சிக்கொள்ளுமே.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (19-Jun-23, 8:44 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 98

மேலே