தேவதை நீயென
தேவதை நீயென
@@@@@@@@@
செவ்வண்ணப் பட்டில்
செதுக்குதடிக் கண்ணாடி/
செம்மேனி உன்னழகை
செப்புச் சிலையாக /
சிக்கெடுத்து வருடிய
சீரானக் கூந்தலில் /
செவ்வந்திப் பூவாட
செவிதனில் காதணியாட/
செவ்வாழைக் கைகளில்
சிணுங்கிடும் வளையலோசையும் /
செந்திலகம் சூடவே
சொக்குதடி பேரழகு/
செங்கதிரால் கதிரவன்
செந்தாமைரயை மயக்குவதாக/
செந்தூரத் தேவதையே
சரணடைந்தான் உன்னிடம் /
செவ்விதழ் வாயால்
சொல்லடிக் காதலுக்கு/
சம்மதம் கூறிடவே
சம்பந்தம் பேசிடுவோம்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்