காதலை சொல்ல வந்தேன்

காதலை சொல்ல வந்தேன்
``````````````````````````````````````````

கைத்தறி சேலைகட்டி சோலைக்கு பூப்பறிக்க/
கூடை கொண்டு போற புள்ள /
பூவைத் தேடும் வண்டாக மாமேன்/
பொஞ்சாதிய கூட்டிச் செல்ல தேடுகிறேன்/

சித்திரை பிறந்திருச்சு நித்திரை கலைந்து/
சொல்லடி சம்மதத்த மண்டபத்தை பதிவுசெய்ய/
வைகாசி பிறந்திட்ட முதல் வாரத்தில்/
வைபவம் வைத்திட நல்ல நாளாம்/

வாழை வளர்ந்து பந்தல்வர காத்திருக்கு/
வாக்கு சொல்லடி தாலியும் செய்திட/
கொடியில் விளைஞ்ச வெற்றிலைய முற்றும்முன்/
காலகாலத்தில் பறித்திடனும் கன்னியும் அதுபோல/

முதிர்கன்னி ஆகுமுன்னே காதலை சொல்லிவிடு/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (19-Jun-23, 7:39 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே