காதலுக்கு மரியாதை

காதலுக்கு மரியாதை
################

அம்மா வழி மாமனின் புதல்வியுமில்லை/
அப்பா வழி அத்தையின் மகளுமில்லை/
தென்றலைக் கண்டவுடன் திறந்திட்டச் சன்னலாக /
தொகை விரித்தாடும் அழுகு பெண்மயிலால்/

கண்ணில் பட்டவுடன் காதல் கொண்டேன்/
காணாத வரையில் தனித்தே இருந்தேன்/
விழியின் வழி இதயம் வந்தவளே/
செவியின் வழியேக் காதல் சொல்லிவிடு/

மெளனம் கலந்திடு தாய் மொழியில்/மெய்யானக் காதலுக்கு சம்மதம் கூறிவிடு/
தரையின் நீரைச் சேகரிக்க இடையூறாக /
பாறைகள் தடுப்பதாகக் காதலைத் தடுத்திட/

சாதிகள் மதங்கள் தடையாக இருக்குமெனில்/
செங்கடலிலின் மேல் உதயமாகும் சூரியனின் /
செங்கதிரின் தீப்பிழம்பாக எரிந்து தகர்த்திடுவேன்/
சதியால் பிரித்தாலும் மனதால் தடுத்திடுவோம்/

வானம் மதியை நெஞ்சில் சுமையாக/
வஞ்சி உன்னை காலமெல்லாம் காத்திடுவேன்/
பெருவெள்ளம் பெருக்கெடுத்து செம்மண்ணில் கலந்து/
பெரோடையில் தெளியாதச் செந்தூர நீராக/

கலந்தே ஓடிடும் கடலில் சேர்ந்திடும்/
கலந்திட்ட நீராக கலந்திடுவேன் உன்னிடம்/
சாதியைக் கடந்து மதத்தை தாண்டி/
சாதித்திடுவோம் கலப்பு திருமணத்திற்கு வழிவகுப்போம்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (19-Jun-23, 7:37 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 47

மேலே