பாவம் ஓவ்வொன்றுக்கும் நூறதிகம் என்றே நுவல் - நீதி வெண்பா 13

நேரிசை வெண்பா

ஆனந் தணர்மகளிர் அன்பாம் குழந்தைவதை
மானம் தெறும்பிசி வார்த்தையிவை - மேனிறையே
கூறவரு பாவம் குறையாதொவ் வொன்றுக்கும்
நூறதிகம் என்றே நுவல்! 13

- நீதி வெண்பா

பொருளுரை:

பசு, பிராமணர், பெண்கள், அன்பு மிகுந்த குழந்தை ஆகியோரைத் துன்புறுத்தலும், மானத்திற்குப் பங்கம் வரும் குற்றமுள்ள சொற்களைக் கூறுதல் ஆகியவை ஒன்றுக்கொன்று குறைவு இல்லாத பாவங்களாகும்;

இக்குற்றங்களால் ஏற்படும் பாவங்கள் ஒன்றுக்கொன்று நூறு மடங்கு அதிகம் ஏற்படும் என்றே சொல் என்கிறார் இப்பாடலாசிரியர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-25, 8:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே