பூமிப் பந்தின் ஆட்டம்
அறுங்கோண பந்தில்
ஆறு வித வண்ணங்கள்
பாதங்கல் உந்தித் தல்ல
கால்பந்தோ நான்கு
திசையிலும் நையாண்டி
ஆட்டம் ஆடுகிறது
எதிர் எதிர் திசையில்
ஓடி ஒழிந்து
மேலே எழுந்து
நேர் கோட்டிலோ
சாய்வு கோட்டிலோ
உதைபட்டு இலக்கை
அடையுது
இலக்கின் வட்டத்திற்க்கு
வெளியே பந்தை தடுப்பதால்
எதிர் அணியின்
சூழ்ச்சியை முறியடிக்கும்
கோல்கீபர் போல
வாழ்க்கையின் இலக்கை
பூமிப்பந்தில்
லாவகமாக கையாலும்
மனிதன்
உதை பந்தின்
மேனியைப்போல
காட்சி தந்தாலும்
கடவுளின் ஆசியைப்
பெருகிறான்.