இல்லையோர் சொர்க்கம் எனக்கு

வில்லினைப் போல்ஏழு வண்ண அழகினில்
முல்லைச் சிரிப்பில் முழுநிலவாய் மாலையில்
அல்லிப் பொழிலில் அருகினில்நீ வந்தமர்ந்தால்
இல்லையோர் சொர்க்கம் எனக்கு
வில்லினைப் போல்ஏழு வண்ண அழகினில்
முல்லைச் சிரிப்பில் முழுநிலவாய்-- செல்வியே
அல்லிப் பொழிலில் அருகினில்நீ வந்தமர்ந்தால்
இல்லையோர் சொர்க்கம் எனக்கு