நாகர்ஜி
டேய் நாகராஜா, க்ல்கத்தாவில் வேலை
கெடச்சு அங்க போன நீ ஆறு மாசம்
கழிச்சு நம்ம ஊர் பக்கம் வந்திருக்கிற.
மிக்க மகிழ்ச்சி. அங்கு நடந்த முக்கிய
நிக்ழ்வுகள் பற்றிச் சொல்லுடா நாகராஜா.
@@@@@@@
இடத்துக்கும் சூழ்நிலைக்கும் தகுந்த
மாதிரி வாழக் கத்துக்கிறவன்தாண்டா
அறிவாளி. கல்கத்தா பெருமாநகரில்
தங்கும் விடுதி போனதும் முதல் வேலையா
விடுதி வழக்கறிஞர் மூலம் என் பேரை
நாகர்ஜி-னு மாத்திட்டேன். அடுத்த
நாளிலிருந்து வங்காள மொழியைக்
கத்துக்க ஆரம்பிச்சு இப்ப வங்காளிகள்
மாதிரியே அந்த மொழியைப் பேச, படிக்க,
எழுதக் கத்துட்டேன். பெற்றோர்
சம்மதத்தொட என் கூட வேலை பாக்கற
ஒரு வங்காளிப் பெண்ணைத் திருமணம்
பண்ணிக்கப் போறேண்டா பொன்சாமி.
#@#@@#@@
.
நீ பெரிய ஆளுடா நாக்கர்ஜி.
@@@@@
டேய் பொன்சாமி நான் நாக்கர்ஜி இல்லடா.
நாகர்ஜி. நாகர்ஜி.