தந்தையின் பெயரை மாற்றி மகன்
டேய் துப்ரேஷு, உனக்கு யாரடா அந்தப்
பேரை வச்சது?
@@@@@@
யாரு நம்ம துப்புராயப்பேட்டை
சோசியர்தான். இந்திப் பேரு மாதிரியே
உள்ள பேரை எனக்கு வைக்கச் சொல்லி
சோசியர்கிட்ட எங்க அப்பா கேட்டாராம்.
நம்ம ஊருப் பேரையே இந்திப் பேரு
மாதிரி ஆக்கி எனக்கு துப்ரேஷ் - னு பேரு
வச்சிட்டார் நம்ம சோசியர் இஷ்டலிங்க
சோதிடர்.
@@@@@@@
சரி உங்க அப்பா பேரு குப்பன். மரியாதை
இல்லாத பேருன்னு நீ பல தடவைக் கூறி
புலம்பின. அதுக்கு ஏதாவது ஒரு வழியைக்
கண்டு பிடிச்சியா?
@@@@@@
அந்த நீண்ட நாள் பிரச்சினைக்குப் போன
வாரமே தீர்வு கண்டாச்சுடா குயிலேஷ்.
@@@@@
என்ன தீர்வுடா துப்ரேஷ்?
@@@@@@@@
'குப்பன்' -னை 'குப்பர்' ஆக்கி அரசிதழில்
வெளியிட்டு உணவுப் பொருள்கள்பங்கீட்டு
அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர்
அடையாள அட்டை,
வாக்காளர் பட்டியல் மற்றும் வங்கிக்
கணக்குப் புத்தகம் எல்லாத்திலியும் எங்க
அப்பா பேரு 'குப்பர்' - டா குயிலேஷ்.