புன்னகையில் வந்துவிட்டாள் காலையில்

பவழமல்லி பூத்திங்கே பாய்போல் விரிய
தவழுது தென்றலில் செங்காம்பு வெண்மலர்
அள்ளி எடுத்து அழகாய்த் தொடுத்திட
வெள்ளிநிலா புன்னகையில் வந்துவிட்டாள் காலையில்
அள்ளிச்செல் வால்பார் அழகு

--- இரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (25-Dec-24, 9:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 18

மேலே