humaraparveen - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  humaraparveen
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Jan-2018
பார்த்தவர்கள்:  1930
புள்ளி:  571

என் படைப்புகள்
humaraparveen செய்திகள்
humaraparveen - சேக் உதுமான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2020 3:46 pm

மதிமயங்கும் மாலை வேளை
கண்ணெதிரே
அலையும் கரையும்..
கைகோர்த்து
அவளும் நானும்..
காதல் செய்யும் நேரம்!

அவளும் அலையும் ஒன்று தான்!

முதல் முத்தத்தின்
ஈரம் காய்வதற்குள்
அடுத்த முத்தம்!!!!

அலை கரையை நோக்கி..
அவள் இதழ்கள்
என் கன்னத்தை நோக்கி..

❤சேக் உதுமான்❤

மேலும்

humaraparveen - சேக் உதுமான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2020 3:49 pm

பெண்ணே!
உன் விரல் தீண்ட
வரம் கிடைத்த எனக்கு...
உன் இதழ் தீண்டும்
பாக்கியம் இல்லாமல் போனதே...
உந்தன் இதழ் உரசும்
உதட்டுச்சாயத்தின் மீது
கோபம் கொண்டேன்...

கோபம் கொண்ட
காரணத்தினால்தான் என்னவோ
பச்சையாக இருந்த நான்
சிவந்து விட்டேன்!!!

-இப்படிக்கு "மருதாணி"

❤️சேக் உதுமான்❤️

மேலும்

humaraparveen - மன்னை சுரேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2020 7:38 pm

என் வீட்டில் நேற்று மின்விசிறியின் காயில் பழுதடைந்தது.
இன்று காலை டியூப் லைட் பியூஸ் போனது.
நான் இரண்டையும் இன்று சரி செய்துவிட்டு கடைவீதிக்கு சென்று வீடு திரும்பினேன்.
அப்போது என் அம்மா மின் விசிறியையும் டியூப் லைட்டையும் சர்ஜிக்கல் ஸ்பிரிட் துணியில் நனைத்து துடைத்து கொண்டிருந்தார்கள் . என்னம்மா பண்ணிக்கிட்ருக்க என்று கேட்க அம்மா சொன்னார்கள் என்னிடம் 'உனக்கு ஒன்னும் தெரியாதுப்பா இந்த கோரோனோ வைரஸ் மறுபடியும் இந்த லைட்டையும் காத்தடியையும் நாசம் பன்னிட்டு போய்டும் அதான் தொடச்சி வைக்கிறேன், இன்னும் கிரைண்டரு மிக்ஸி தொடக்க வேண்டியிருக்கு ' என்றார்கள் .
அடப்பாவமே கோரோனோ பீதியில் எங்கம்மா இந்த

மேலும்

முல்லைப்பூ சிரிப்பழகி ---------------------------------------- ஆசை அத்தை மக ; அழகுக்கெல்லாம் ஒத்தை மக - மாமன் பெத்த மக ;இந்த மாமனுக்கே பூத்த மக.... உன் காலை சிரிப்புக்கு - அல்லிப்பூ பூக்குது ; அடுத்து எப்போ சிரிப்பானு என்னை தானே கேக்குது; மறுபடியும் சிரிப்பையோ னு மத்தியானம் பாக்குது, பாக்க மட்டும் முடியாம தினம், தினமும் தோக்குது.... உன் முல்லைப்பூ சிரிப்புக்கு - முழு நிலவும் தேயுதடி, உன் வீட்டைச் சுத்தி, சுத்தி -உடல் மெலிஞ்சு காயுதடி.... என் முல்லை பூ சிரிப்பழகி... துள்ளி நீ பாண்டி ஆடுனது மண்ணுல மட்டும் இல்ல - என் மனசுலயுந்தேன்... ஆடி மாசக் காத்துல அம்மியும் பறக்குமாம் - அம்மணி உம்மாரப்பு விலகையில - மறைச்சது மானத்தை மட்டுமில்ல - உன் மனசையும்தான்.... கொஞ்சம் நீ கோவிச்சாலும் - உன் முல்லை பூ சிரிப்பு முகம் முள்ளாய் தான் மாறுதெனக்கு - ஒண்ணுமே புரியலடி இந்த கணக்கு... அனுதினமும் அடங்காத ஆசை வச்சேன் - அத்தனையும் அழகாய் தான் அடுக்கி வச்சேன் - உன் அப்பனை தான் கண்டுபுட்ட அம்புட்டையும் அடக்கி வச்சேன்.. கடலுல வலை விரிச்சா கண்டிப்பா மீனு மாட்டும் ; நீ கண்ணால வலை விரிக்க ; காதலுல நானும் மாட்ட, கண்ணுல வச்சு காப்பாத்துவேன் - உன் முல்லைப்பூ சிரிப்பை மட்டும் முழுசா தந்திடெனக்கு.... வினோத் பரமானந்தன்... 25-Mar-2020 6:11 am
humaraparveen - சேக் உதுமான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2020 2:01 pm

இணையத்தில் மட்டுமே
இயங்கி கொண்டிருக்கும்
என் கற்பனைகள் யாவும்
எந்தன் கண் முன்
தோன்றும் நாள் எந்நாளோ?

உன்னை நினைத்து..
கவிதையாய் வடித்து..
கரைந்து போவது..
என் கற்பனைகள் மட்டுமல்ல..
எந்தன் வாழ்க்கையும் தான்!!!

வா பெண்ணே!
கவலைக்கிடமாக கிடக்கும்
என் கற்பனைகளுக்கு
உயிர் கொடுக்க வா!!!

❤️சேக் உதுமான்❤️

மேலும்

humaraparveen - Roshni Abi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2019 1:25 pm

ஐந்து வருடங்களாக ஊரில் இருந்து வேலை செய்து காெண்டிருந்த தீபாவுக்கு இடமாற்றம் கிடைத்தது. ஓரிடத்தில் தங்கி இருந்து தான் வேலைக்குச் செல்ல வேண்டும். ஊரிலிருந்து ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் பயணம் செய்து வேலைக்கு செல்வது சாத்தியமற்ற ஒன்று. அவசர அவசரமாக தங்குமிடம் தேடிக் காெண்டிருந்தவளுக்கு அதிஸ்டவசமாக கம்பனிக்கு அருகாமையில் ஒரு இடம் கிடைத்தது. எல்லா வசதிகளுடனும், பாதுகாப்பான ஒரு அடுக்குமாடியில் தனியான ஒரு தங்குமிடம். தீபாவுக்கும் இடம் பிடித்தது. இரண்டு வாரத்தில் குடியிருப்பதற்கான எல்லா ஆயத்தங்களுடனும் வருவதாக கூறி முற்பணம் செலுத்தி  விட்டு ஊருக்குத் திரும்பினாள்.

காலை பத்து மணி,  ஊரிலிருந்து பே

மேலும்

Super 18-Mar-2020 11:11 am
humaraparveen - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2020 10:42 pm

பொழுது கழியும்
பாவை பார்வை கழியுமோ ?

வளர்வதும் தேய்வது நிலவு
நீளுவதோ.... காதல் நினைவு
நினைவுகள் கோர்த்த கனவு
இல்லையே ...ஓர் முடிவு


காதல் !
முடிவற்ற தொடர்கதை
கருவுற்ற கற்பனை கதை

வானம் மண்ணுக்குள்ளும்
பூலோகம் விண்ணுக்குள்ளும்
கவிக்கெட்டா கற்பனை
காதல் மனதுக்குள்ளும்
தூங்காமல் துள்ளும்

சிறகு முளைக்கும்
வானம் தாண்ட துடிக்கும்

பார்த்த இடமெல்லாம்
பட்டாம்பூச்சி பறக்கும்

பாட்டு குயிலை மிஞ்சும்
ஆடும் மயிலும் கெஞ்சும்
கற்பனை கவியை விஞ்சும்

இது காதல் கீதம்
வாழ்வின் வேதம்

மேலும்

humaraparveen - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2020 8:48 pm

உலகிற்கு உயிர்வளி கொடுப்பவர்கள்
இவர்கள் உயர்ந்தவர்கள்
ஆம் !
தியாகத்தால் உயர்ந்தவர்கள்
இவர்கள் தீபங்கள்
ஆம்!
உயிர்க்கு ஓளி செய்யும் தீபங்கள்
உச்சி முதல் பாதம் வரை உலகுக்கு
அர்ப்பணிப்பவர்கள்
எளிமையாய் வாழ்பவர்கள்
எல்லோர்க்கும் வாழ்வு கொடுப்பவர்கள்

கீச் கீச் கிளிகள்...
கூக் கூக் குருவிகள்...
டொக் டொக் கொத்திகள்...
இவர்களை நம்பித்தான் !
ஏன்
கோடிநியூரான் கொண்ட உடலே
இவர்கள் உதவி இன்றி இயங்காது

காற்றவன் ....வந்துவிட்டால் போதும்
ஓயாது வாயாடுவார்கள்
சமயத்தில் குத்தாட்டம் போடுவார்கள்
நிசப்தமாயும் நின்றிடுவார்கள்

பசுமையில் அமைதியை பறைசாட்டுவார்கள்
பல்லாண்டு

மேலும்

humaraparveen - Roshni Abi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Feb-2020 6:52 am

கட்டில் வெறுமையாகவே இருந்தது.  சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி  "திலீப் நாளைக்கு கலியாணம் என்று சாென்னான், நாங்கள் சம்மதிக்கவில்லை என்ற காேபம் அவனுக்கு, இந்த நேரம் எங்கே பாேய் தேடுவது" யாேசித்துக்  காெண்டிருந்தார். திடீரென எழுந்து வெளியே வந்த திலீப்பின் அம்மா
"என்னங்க இன்னும் தூங்காமல் என்ன செய்யிறீங்க, மணி இரண்டாச்சு"
"திலீப் வீட்டை விட்டு பாேயிட்டானப்பா, நாளைக்கு கலியாணமாம்"
"என்னங்க சாெல்லுறீங்க"
"ஆமா தேவி, நாங்கள் சம்மதிக்கவில்லை என்ற காேபத்தில் வீட்டை விட்டு பாேயிட்டான்"
பதறிய தேவி சுவராேடு சாய்ந்தபடி உட்கார்ந்தாள்.
சில நிமிடங்களில் கணவர் பாலு அப்படியே தூங்கிக் காெண்டிருந்தார். ம

மேலும்

நல்ல கதை ..வாழ்த்துக்கள் 29-Feb-2020 10:14 am
humaraparveen - Roshni Abi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Feb-2020 6:40 am

நீண்ட நேரத்திற்குப் பின் வெளியே வந்த டாக்டர் "சியா நினைவு  திரும்பி விட்டா ஆனால் பேச முடியவில்லை" என்றதும் திலீப் இடிந்து பாேய் நின்றான். அம்மாவும், அக்காவும் டாக்டரின் கையை பிடித்து "எப்படியாவது சியாவை பேச வையுங்க டாக்டர், என்ர பிள்ளைக்கு ஏன் இப்படியாச்சு" கதறல் திலீப்பிற்கு இன்னும் வேதனையாயிருந்தது.

தினமும் அவளை வைத்தியசாலை சென்று பார்த்து வந்தான். அவனால் வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. பயித்தியம் பிடித்தவன் பாேலிருந்தான். அதிகமான மன அழுத்தத்தால் திலீப் பாதிக்கப்பட்டான். இருவரும் ஒருவரிடம் ஒருவர் காதலைச் சாெல்லா விட்டாலும் இருவரும் காதலர்கள் என்று எல்லாேரும்  நம்பி விட்டார்கள்.

மேலும்

நன்று.. 28-Feb-2020 12:56 pm
humaraparveen - கண்ணம்மா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2020 10:24 am

உன்னைப்பற்றி எழுதும் என் எழுத்தாணிக்கு
தெரியும் என் காதலின் ஆழம்
உன் இரு விழிகளை கண்டு தொலைந்த என்னை
உன் இதயத்தில் கண்டுபிடித்த - அந்நொடி
ஓர் குழந்தையாக தத்தளித்த என்னை
உன் கைகளில் தாங்கிய - அந்நொடி
துக்கத்தில் சிதறிய என் இதயத்தை
அன்புக்கரங்களால் நீ கோர்த்த - அந்நொடி
தோல்வியிலும் என்னை வீழவிடாமல்
வெற்றியிலும் என்னை ஆட விடாமல் கொண்டு சென்ற - அந்நொடி
காதலின் உண்மையில் அரிச்சந்திரனை மிஞ்சிய - அந்நொடி
அன்பை அள்ளி தருவதில் கர்ணனை மிஞ்சிய - அந்நொடி
அந்நொடி ! அவ்வொரு நொடி !!
இறுதியில் அது கொண்டு சென்ற அந்நொடி - " திருமணம்"

- அது மரண

மேலும்

நன்றிகள் !!! 28-Feb-2020 10:45 am
கண்ணான படைப்பு . இயற்றுங்கள் இன்னும் இன்னுமென! 28-Feb-2020 10:08 am
நன்றி !!!!!! 28-Feb-2020 9:00 am
அருமையான படைப்பு 28-Feb-2020 8:20 am
humaraparveen - கேள்வி (public) கேட்டுள்ளார்
30-Jan-2020 9:33 pm

CAA,NRC,NRP பற்றி தங்கள்
கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

மேலும்

ஹா ஹா ஹா 09-Feb-2020 4:43 pm
சாமத்தியமான நழுவல் 👍 09-Feb-2020 3:34 pm
CA ன்ன சாட்டர்ட் அக்கௌன்டன்ட் ன்னு சொல்லுவாங்க. இதுல இன்னொரு A யும் இருக்கே ஒரு வேளை சாட்டர்ட் டபுள் அக்கௌன்டன்ட்டோ ? NRC நார்த் இந்தியாவுல இருக்கிற கட்சியா இருக்கலாம் . NRP இல்ல TRP ன்னா TELEVISION RATING POINTS இது சரியா இருந்தா சீரியல் அஞ்சு வருஷம் ஓடும் இல்லேன்னா பாதியிலே நின்றுவிடும். நம்ம சிற்றறிவுக்குப் பட்ட கருத்து இவ்வளவுதான் 07-Feb-2020 11:31 pm
humaraparveen - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2018 1:28 pm

தேர்வு தேர்வு ‌
வந்தது மாதிரி தேர்வு!

இரவும் விழித்தோம்
அதிகாலையும் எழுந்தோம்
படி படி என்று படித்தோம்!

ஒரு வழியாய் தேர்வையும் முடித்து விட்டோம்.
மழை துளி துளியாய் ....

காகிதங்களை வாங்கி வாங்கி எழுதிய எங்கள் கடமையை கண்ட கார்மேகங்கள்மோதி வந்த ஆனந்த துளிகளோ?

தெரிந்ததை மட்டும் தெளிவாக எழுதிய எங்களை நோக்கிய புன்னகை துளிகளோ?

தெரிந்ததையும் தெரியாததையும் குழப்பி வைத்து கணித குருவை கிறுக்குப் பிடிக்க வைக்கும் கல்லூரி கனவான்களை கண்டு சிரித்து சிரித்து சிதறிய சிரிப்பு திவலைகளோ?

தேர்வு துவங்கியது முதல் கடைமணித்துளி வரை எழுதிய கணிதமாணவிகளை கண்டு தெளித்த தங்கத் துளிகளோ?

புத்தக

மேலும்

கருத்துக்கு நன்றி தோழி 19-Oct-2018 3:24 pm
அருமை 19-Oct-2018 12:28 pm
நன்றி ப்பா. 19-Oct-2018 8:11 am
மிக இனிய கவிதை...மகளுக்கு சொற்கள் கூடி வருகிறது. 18-Oct-2018 7:07 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

Roshni Abi

Roshni Abi

SriLanka
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
வாலி ரசிகன்

வாலி ரசிகன்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (41)

இவரை பின்தொடர்பவர்கள் (41)

சேக் உதுமான்

சேக் உதுமான்

கடையநல்லூர்,நெல்லை
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே