சுரேஷ்குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சுரேஷ்குமார்
இடம்:  சேலம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Mar-2011
பார்த்தவர்கள்:  1082
புள்ளி:  345

என்னைப் பற்றி...

சமூகத்தில் மாற்றம் தேடிடும் ஒரு சராசரி தமிழன்... 💐

என் படைப்புகள்
சுரேஷ்குமார் செய்திகள்
சுரேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2021 12:20 am

இருப்பவன்
இரப்பவன்
இறைவன்
நீங்கள்
நான்...
நிரப்பிக்
கொள்ளுங்கள்...
மனதை
மெளனத்தை
வாழ்வை....
மீண்டும்!
நான்
நீங்கள்
இறைவன்
இரப்பவன்
இருப்பவன்
முடிவு.

மேலும்

சுரேஷ்குமார் - சுரேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2020 12:57 am

எங்கோ சுற்றி
எதையோ உமிழ்ந்து
வாழ்க்கையெனும்
நீரோடையில்
மழைத்துளி.....!
நினைவும்
மனதும்
மொழியும்
பொழியும்
மழையின்
நிறம்.... !
அதே நிலா?
அதே கனா?
ஒரே வினா?
விடையின்
மொழிதான்
எங்கோ?
ஓடையின்
பெயர் தான்
ஏதோ?

மேலும்

நன்றிகள் 28-Nov-2020 9:32 pm
அருமை 24-Nov-2020 6:57 pm
சுரேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2020 12:57 am

எங்கோ சுற்றி
எதையோ உமிழ்ந்து
வாழ்க்கையெனும்
நீரோடையில்
மழைத்துளி.....!
நினைவும்
மனதும்
மொழியும்
பொழியும்
மழையின்
நிறம்.... !
அதே நிலா?
அதே கனா?
ஒரே வினா?
விடையின்
மொழிதான்
எங்கோ?
ஓடையின்
பெயர் தான்
ஏதோ?

மேலும்

நன்றிகள் 28-Nov-2020 9:32 pm
அருமை 24-Nov-2020 6:57 pm
சுரேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2020 12:59 am

பற்பசை
விளம்பரங்கள்
எத்தனை தான்
கூப்பாடு
போட்டாலும்.....
புன்னகை என்பது
தனி!
அழகுதான்
பொக்கை வாய்
மழலையும் !
கிழவியும்!

மேலும்

சுரேஷ்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2020 2:18 am

காகிதங்கள்
இங்கும் அங்கும்
பறக்கட்டும்....!
தூசி நாசி
துளைத்தபின்
ஊறும் உணர்வுகளில்
மொழியும் இலக்கணனும்
ஊமைதான்.....
அடங்கா...?
மௌனம்!
காது கோணாத
ஊசிகள்
இடற் படற்
அறிந்து
சொரிந்து கொள்கின்றன
இதயத்தின்
துடிப்புகளில்....
கணக்கு மெய்க்குமோ?
தோற்க்குமோ?
இதோ
எதிற் வரும்
நொடியினின்
துடிப்புகளில்...
டிக் டிக்
டிக் டிக் டிக்....

மேலும்

ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) Nathan5a854b1c08cea மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Aug-2018 7:03 pm

உன் பிம்பங்கள்
சிதறிய தினம் இன்று.
அதே ஓடை
அதே பாதை
பூக்கள் இடையறாது
காற்றை வெட்டுகிறது.
காகங்கள் வருமோ
தேன் அருந்த...?
ஒற்றை மரமும்
ஓலமிடும் தனிமையும்
அரைத்து தின்னும்
மிச்ச நாட்களில்
என் பெயரையாவது
நினைவு கொள்
கிழிந்த இரவுகளில்.
நானோடும் நகரத்தில்
தொலைந்த என் முகமும்
தொலையாத உன் நினைவும்
சந்தி பெருக்கி சாகும்.
சொல்லாத கவிதைகளை
நில்லாது கொல்லட்டும்
பெய்யும் மழையின் எச்சில்.
தோழி...
விலகாத வியப்பொன்று...
எங்கு கற்றாய்
மலர் கொல்லும் வித்தை?

மேலும்

போற்றுதற்குரிய கவிதை பாராட்டுக்கள் கவிதை விமர்சனமும் அருமை தொடரட்டும் தங்கள் கவிதை இலக்கிய பயணம் 21-Aug-2018 10:05 pm
பேய் விழி நர்த்தனம் என்றுதான் துவங்கினேன். மனது கேட்கவில்லை.உங்களின் இணைப்பு கவிதையும் நன்று.நீங்கள் தடாக தாமரை...நான் ஜெலட்டின்... முடிந்தவரை வெடிக்க வேண்டும்...வெடித்துக்கொண்டே இருக்க வேண்டும். 21-Aug-2018 10:06 am
நீங்கள் சொல்வது முழு உண்மை 1940களில்... 21-Aug-2018 10:01 am
பைத்தியம் பிடித்தாடுதடி ----என்று படிக்கவும் 21-Aug-2018 9:45 am
சுரேஷ்குமார் - சுரேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2018 1:39 am

மடல் விரித்து
இடை மீறி
ததும்புகிறது...
தனித்தனியாய்
காற்றில் மிதந்தாலும்
திடுமென மனதை
சூல்கொண்டு
பொழிகிறது...
கூடிய கார்மேகத்தில்
உதித்திட்ட மின்னலாய்
முடியாமல் நீ
அவிழ்த்துவிட்ட
கூந்தலின் உச்சியில்
மல்லிகைச்சரம்....
ஒற்றை மின்னலின்
வாசம்
என் சுவாசத்தில்...

மேலும்

நன்றி ஐயா முயர்ச்சிக்கிரேன்... 11-Aug-2018 10:58 am
இயற்கையை காதல் உணர்வுக்கு இலக்கியமாக்கி இருக்கிறீர்கள். சிறந்த கவித்துவமும் கற்பனை வளமும் உங்கள் கவிதையில் காண்கிறேன் . யாப்பு வழியில் பழகுங்கள் கவிஞன் என்ற முழு அடையாளம் கிடைக்கும். வாழ்த்துக்கள் 11-Aug-2018 8:21 am
சுரேஷ்குமார் அளித்த படைப்பில் (public) SHAN PAZHANI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Aug-2018 11:12 pm

சில ...சிற் சில...
சில தான்...
இந்த கவிதையில்
கவிதையென்றால்
பெரிதாய் புதிதாய்
விஷயமேதுமில்லை
விஷமமுமில்லை...
அரசியல் நமக்கு
அப்பாற்பட்டவை...
நொடியில் தோன்றி
அந்த நொடியிலேயே
மரித்து போகிறது
நம் ரோசங்கள்
அரிசியிலலில்...
வரிசையில் நின்று
வெறும் பையுடன்
வீடு திரும்பினாலும்
மீண்டும் வரும்
அடுத்த வியாழன் என...
வளைந்து போக தெறியும்
சாலைகளில் எனக்கு
என் நேர்மை செல்லரித்தபின்
தாரில் தரம் தேடுவது எப்படி...?
மரமும் இயற்கையும்
மட்டுமா...?
வாரத்திற்கு ஒருமுறையென்ன
வருடத்திற்கு ஒருதடவை
வரட்டுமே நீர்..
எவ்வளவு அழகாய்
ஆக்சிஜனை பிரசவிக்கிறது
தெரு பைப்புகள்...
நேராய்தான் நீட்டினேன

மேலும்

இல்லை நான் சென்ற பொதுதேர்தலை வைத்து எழுதினேன்...தற்போது இடைத்தேர்தல் களின் சந்தை மதிப்பு கூடியிருப்பது உண்மைதான்.... 02-Aug-2018 9:43 pm
கருத்திற்கு நன்றி நண்பரே... 02-Aug-2018 9:42 pm
உண்மை இந்நிலை கூறியது ...அருமை.. 02-Aug-2018 3:07 pm
நிறைய வரிகளை சற்று குறைத்து இருக்கலாம் என்று தோன்றியது.... இன்னும் 500 தான் என்று நினைக்கின்றீரா? விலைவாசி மாறிவிட்டது 02-Aug-2018 12:13 pm
சுரேஷ்குமார் - சுரேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2018 11:12 pm

சில ...சிற் சில...
சில தான்...
இந்த கவிதையில்
கவிதையென்றால்
பெரிதாய் புதிதாய்
விஷயமேதுமில்லை
விஷமமுமில்லை...
அரசியல் நமக்கு
அப்பாற்பட்டவை...
நொடியில் தோன்றி
அந்த நொடியிலேயே
மரித்து போகிறது
நம் ரோசங்கள்
அரிசியிலலில்...
வரிசையில் நின்று
வெறும் பையுடன்
வீடு திரும்பினாலும்
மீண்டும் வரும்
அடுத்த வியாழன் என...
வளைந்து போக தெறியும்
சாலைகளில் எனக்கு
என் நேர்மை செல்லரித்தபின்
தாரில் தரம் தேடுவது எப்படி...?
மரமும் இயற்கையும்
மட்டுமா...?
வாரத்திற்கு ஒருமுறையென்ன
வருடத்திற்கு ஒருதடவை
வரட்டுமே நீர்..
எவ்வளவு அழகாய்
ஆக்சிஜனை பிரசவிக்கிறது
தெரு பைப்புகள்...
நேராய்தான் நீட்டினேன

மேலும்

இல்லை நான் சென்ற பொதுதேர்தலை வைத்து எழுதினேன்...தற்போது இடைத்தேர்தல் களின் சந்தை மதிப்பு கூடியிருப்பது உண்மைதான்.... 02-Aug-2018 9:43 pm
கருத்திற்கு நன்றி நண்பரே... 02-Aug-2018 9:42 pm
உண்மை இந்நிலை கூறியது ...அருமை.. 02-Aug-2018 3:07 pm
நிறைய வரிகளை சற்று குறைத்து இருக்கலாம் என்று தோன்றியது.... இன்னும் 500 தான் என்று நினைக்கின்றீரா? விலைவாசி மாறிவிட்டது 02-Aug-2018 12:13 pm
சுரேஷ்குமார் - சுரேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2018 11:23 pm

விலக்குற்ற விதி
அறிவாயோ..!
மதிப்பற்ற சூன்யத்தின்
மையம் தேடுவாயடி...
எதுவுமற்று போகலாம்
எல்லாவும் ஆகலாம்
இடுவது உன்
விருப்பம்...
ஒன்று நீயெனில்
பூஜ்யமாய் இருக்கிறேன்
ஒன்றிர்க்கு முன்
ஒன்றுமேயில்லை
பிணைந்து வந்தால்
இலக்கமேயில்லை
அறிவாயோ...?
எல்லைகள் அற்றும்
எல்லைக்குள்ளும்
நீ அற்றும்
உனக்குள்ளும்
நிற்க்கும்....
நான் ஓர் பூஜ்யமே!

மேலும்

சுரேஷ்குமார் - சுரேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2018 11:08 pm

... கண்களுக்கு
புலப்படாத
உயிரின்
நிர்வாணம்
பசி..!

மேலும்

உப்புமா சாப்பிட்டு லஞ் எடுத்துக் கொண்டு ஒரு குட்டித் தூக்கமும் போட்டுவிட்டு வந்தால் போதும்.ஒரு அவசரமும் இல்லை வறுமையும் பசித்தவனும் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.காத்திருப்பார்கள்! 03-Jul-2018 2:37 pm
ஆம் ஐயா பசி ஓர் உணர்வு பசித்தவுடன் புசித்து விடலாம் என்ற நிலையில் இருப்பவர்க்கு வயறு சார்ந்தது ஆனால் எவ்வளவு பசித்திருப்பினும் புசிக்கவியலாதவர்க்கு அது உயிர் சார்ந்தது....உடையற்ற நிர்வாணம் மற்றவர்களுக்கு நிச்சயமாக அசெளகர்யம் ஏற்படுத்தும், கலவியை தவிர்த்து சொல்கிறேன். அதைப்போல் உணவற்று இருப்பதை உயிரின் நிர்வாணமாக கருதுகிறேன்..அது பெரும்பாலும் கண்களுக்கு புலப்படுவதில்லை. கருத்திற்கு நன்றி ஐயா... 03-Jul-2018 11:51 am
எதை சொன்னாலும் பசி பசிதான்.... வருகிறேன், உப்புமா ஆறி விடும். 03-Jul-2018 11:00 am
பசி ஒரு உணர்வு . வயிறு சார்ந்தது . தீனி போட்டால் அடங்கிவிடும் மூன்று மணி நேரத்திற்கு பின் பசி பசி என்று உணர்வு மீண்டும் கோரிக்கை வைக்கும் . பசி வயிற்றின் தொடர் கோரிக்கை . உணர்வுகளை ஒடுக்கி உயிர் உய்து நிர்வாண நிலை எய்துதலைப் பற்றி கூறும் புத்தரின் பௌத்தம் . நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் ? 03-Jul-2018 9:16 am
சுரேஷ்குமார் - சுரேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2018 6:45 pm

இரண்டு ஆயுள்
தண்டனைகளை
முடித்து கொண்டுவிட்டது
என் காதல்!
எங்கே இருக்கிறாய்?
என்னவளே..
தேடல்கள் சுகம்தான்
இருப்பினும்
விடுதலை கொடுக்க
வாயேன் என் மனதிற்கு
காத்திருக்கிறேன்....

மேலும்

நன்றி... 03-Jun-2018 2:36 pm
அருமை 03-Jun-2018 12:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (39)

user photo

வேலு ரௌத்திரம் பழகு

காஞ்சிபுரம்
சத்யா

சத்யா

Chennai
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (39)

user photo

Maharandan

Pondicherry
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (38)

springsiva

springsiva

DELHI
user photo

Maharandan

Pondicherry
கார்த்திக் பழனிச்சாமி

கார்த்திக் பழனிச்சாமி

கோவை, தாராபுரம், சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே