சத்யா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சத்யா
இடம்:  Chennai
பிறந்த தேதி :  30-Oct-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2013
பார்த்தவர்கள்:  911
புள்ளி:  256

என்னைப் பற்றி...

எழுத்தாளன்,பாடலாசிரியன் இயக்குனர் மற்றும் பட தொகுப்பாளன்

என் படைப்புகள்
சத்யா செய்திகள்
சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2019 2:02 am

வறுமைக்கு வாழ்க்கை பட்டதால்
வேறு யாருக்கும் வாழ்க்கை படாமல்
நான்

என் குடும்ப சூழ்நிலை
எனக்கு தெரியும் - ஆனால்
வயதிற்கும் உணர்ச்சிக்கும் ?

நெட்டையாய்
குட்டையாய்
மாநிறமாய்
அட்ட கருப்பாய்
இப்படி மாறி மாறி
வருவார்கள் போவார்கள்
பெண் பார்க்கும் நாடகத்தில்
கதாநாயகர்களாய்

ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும்
கண்ணீரில் நானும்
என் அம்மாவும்

என்னோடு படித்தவர்கள்
பழகியவர்கள் என
அனைவரின் திருமணத்திற்கு
சென்று வந்த பின்
என் வீட்டு கண்ணாடியின்
ஏளன பார்வைக்குத்தான்
இன்று வரை புரியவே இல்லை
அர்த்தம்

இது இப்படி என்றால்
இரவுகள் . . . .

ஏன் வருகிறதென்றே தெரியாமல்
வந்து செல்லும்

மேலும்

சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2019 1:23 am

இரவுகள் என்றதும்
நினைவிற்கு வருவது . . .

உறக்கம் தொலைத்து
உலா வரும் நிலா

அந்தரத்தில் தொங்கும்
விண்மீன்கள்

கண் மை அள்ளி
உடலெங்கும் பூசி கொண்ட வானம்

அத்து மீறி ஆடைக்குள் நுழையும்
தென்றல்

அடிக்கடி தற்கொலைக்கு முயலும்
மின்வெட்டு

தூரத்தில் கேட்கும்
இரயிலின் சப்தம்

யாருக்கும் தெரியாமல்
வந்து போகும் கடவுள்

இத்துடன்
விழிகளுக்கும் இமைகளுக்கும்
நின்றபடி
என் உறக்கத்தை கொலை செய்து கொண்டிருக்கும் உன் நினைவு

என் இதயத்தை களவாடிய
குற்ற உணர்வு இல்லாமல்
உறங்கும் நீ

இரவுகள் கருமையால் மட்டுமல்ல
கனவுகளாலும்
வண்ணங்களாலும் ஆனதுதான்

மேலும்

சத்யா - சரண்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2019 8:12 pm

சிலகணங்களுடன் போராடிப் பார்க்கிறேன்...,
அவை உன் சாயல்களற்ற பொழுதுகள்..!
என் இருட்டறைச் சிறு ஒளியாய் உன் பிம்பம்..!
என் வெள்ளைக் காகிதத்தில் கொள்ளை நிற கனவுகள் நீ..!
பிரிவின் சுமைகளுக்கு பிரசவம் இல்லை.., ஆம்..!
பிணமாய் மாறும் வரை என் இதயம் சுமக்கும் உன்னை..!

மேலும்

நன்றி 15-Feb-2019 2:01 pm
நன்றி 15-Feb-2019 2:01 pm
தங்கள் கருத்துகளுக்கு நன்றி 15-Feb-2019 2:00 pm
இதுவும் கடந்து போகும் வாழ்த்துகள் நிறைய எழுதுங்கள் 15-Feb-2019 1:41 pm
வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2019 10:37 am

வளமான இந்நாட்டின் பாரம்பரியம்
மகோன்னதமானது-இங்கு
ஓர் தகுதியான ஆணும் பெண்ணும்
மணமேடை ஏறி மணம்முடித்தப்பின்
கணவன்-மனைவி என்ற ரத்தமும் தராத
புதிய உறவை உருவாக்கிக்கொண்டு
வாழ்க்கைப் பாதையில் காதல் பயண

மேலும்

ஆர்வ மிகுதியும் வயதின் தேவையும் கனவுகளில் தொடங்கி கனவுகளோடு முடியும் இளமை திருவிழா இதுவும் கடந்து போகும் வாழ்த்துகள் நண்பரே 15-Feb-2019 1:38 pm
நல்ல கருத்தை சொல்லி இருக்கின்றிர்கள். ஆனால் ஆனால் இதை கவிதை முறையில் எழுத முயன்ற அதைவிட கட்டுரையாக எழுதி இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். 14-Feb-2019 4:30 pm
ஒவ்வொருவர் வாழ்வும் நலம்பெற உண்மைக் காதல் அவசியம் , வாழ்த்துக்கள் வாசவன் 14-Feb-2019 10:39 am
தங்களின் ஆத்மபூர்வமான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே வேலாயுதம் 14-Feb-2019 6:49 am
சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2019 4:24 pm

நிலவிற்கு கூட
ஆழகாகத்தான் இருக்கிறது
ஆடை
சுடிதாரில் நீ

மேலும்

சத்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2019 12:27 pm

எப்பொழுதும் போல்
இப்பொழுதெல்லாம் இருப்பதில்லை
என் இரவுகள்

நிலவு
விண்மீன்
சில துண்டு மேகங்கள்
இவைகள் தான் இது வரையில் இரவுகளில்

இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை

படுத்ததும் உறங்கி பழகியவனின்
கண்களில் கலவரம் மட்டுமே இப்பொழுது

இரவு பகலென மாறிடும் நொடியில்
என் தனிமையின் தவிப்புகள்

நிலவு கூட சூரியனாய்
அனல் கூட்டுகிறது தினமும்

விண்மீன்களின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை
இப்பொழுதெல்லாம் ரசிக்க முடிவதே இல்லை

சுகமான தென்றல் கூட
பெரும் புயலாய் மோதி உடைக்கிறது என்னை

இதுவரை இரவினை காரிருளாய் மட்டும் கண்டவன்
இப்பொழுது கலர் கலரான இரவுகளால்
கதிகலங்கி நிற்கிறேன்

முன்பெல்லாம் கனவுக

மேலும்

சத்யா - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2018 10:07 am

ஒரு வரி கவிதை
எழுத முயன்று
எப்பொழுதுமே
தோற்பவன் நான்

உன் பேரழகையும்
உன் பேரன்பையும்
ஒரு வரியில்
அடக்கி விட முடியுமா என்ன ?

மேலும்

நன்று 10-Dec-2018 9:47 am
மிக்க நன்றி 07-Dec-2018 12:26 pm
இனிமை!! 07-Dec-2018 10:30 am
சத்யா - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2018 2:27 am

முதலிரவு . . .

கடைசி வரி வரை கவன சிதறலை தவிர்க்கவும். . .

இது தான் முதல் முறை
தொட்டு கொள்வதும்
உரசி கொள்வதும்

எனக்கு பிடிக்கும்
என்னை பிடிக்குமா என்றால்
கேள்வி குறியே மிஞ்சி நிற்கும்

ஆடம்பரமாகவும் அல்ல
அதே சமயம்
அழகிற்கும் பஞ்சமில்லை

பார்த்து கொண்டே
தேனீர் பருகி கொண்டேன்

ஆர்வம் ஒரு பக்கம்
அசதி ஒரு பக்கம்
உறங்கவும் மனமில்லை
உடலும் ஒத்துழைக்கவில்லை

தூக்கம் வந்து
கண்ணை கட்ட
தேனீர் பருகி
சோம்பல் முறித்தேன்

கால்களால் நடந்தவன்
இப்பொழுது
பார்வையால் கடக்கிறேன்

பிடித்த இடங்களில்
அடம்பிடித்து நிற்கிறது
பார்வையும் மனமும்

யாருமில்லா தனியறையில்
இப்படி இருப்

மேலும்

கருத்துக்கு பதில் அளித்தமைக்கு நன்றி. 07-Dec-2018 10:59 am
மிக்க நன்றி நண்பரே அவசரத்தில் ஏற்பட்ட தவறு மட்டுமே 06-Dec-2018 10:12 am
நன்றி நண்பரே 06-Dec-2018 9:52 am
செம்ம...😊 05-Dec-2018 8:03 pm
சத்யா அளித்த படைப்பில் (public) Sheik Uduman59c65538e2b72 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Dec-2018 2:27 am

முதலிரவு . . .

கடைசி வரி வரை கவன சிதறலை தவிர்க்கவும். . .

இது தான் முதல் முறை
தொட்டு கொள்வதும்
உரசி கொள்வதும்

எனக்கு பிடிக்கும்
என்னை பிடிக்குமா என்றால்
கேள்வி குறியே மிஞ்சி நிற்கும்

ஆடம்பரமாகவும் அல்ல
அதே சமயம்
அழகிற்கும் பஞ்சமில்லை

பார்த்து கொண்டே
தேனீர் பருகி கொண்டேன்

ஆர்வம் ஒரு பக்கம்
அசதி ஒரு பக்கம்
உறங்கவும் மனமில்லை
உடலும் ஒத்துழைக்கவில்லை

தூக்கம் வந்து
கண்ணை கட்ட
தேனீர் பருகி
சோம்பல் முறித்தேன்

கால்களால் நடந்தவன்
இப்பொழுது
பார்வையால் கடக்கிறேன்

பிடித்த இடங்களில்
அடம்பிடித்து நிற்கிறது
பார்வையும் மனமும்

யாருமில்லா தனியறையில்
இப்படி இருப்

மேலும்

கருத்துக்கு பதில் அளித்தமைக்கு நன்றி. 07-Dec-2018 10:59 am
மிக்க நன்றி நண்பரே அவசரத்தில் ஏற்பட்ட தவறு மட்டுமே 06-Dec-2018 10:12 am
நன்றி நண்பரே 06-Dec-2018 9:52 am
செம்ம...😊 05-Dec-2018 8:03 pm
சத்யா - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2018 10:29 am

சாக பழகு

அனைவரும் தயாராகுங்கள்
ஆயுட்காலத்தை முடித்து கொள்ள

இது வாழ தகுந்த பூமியல்ல
இனி வாழும் தகுதியுமில்லை
சாமாணியர்களுக்கு

கார்பரேட் நிறுவனத்திற்கும்
கார்பரேட் கைகூலிகளுக்குமே
அனுமதி உண்டு - இங்கு
ஆனந்தமாய் வாழ

தாவரங்களோடு மனிதர்களையும் கொன்று
தார் சாலை அமைக்க
ஆணை வந்ததால்
எங்களுக்கு வாக்கு போட
பிச்சை வாங்கியவர்கள்
காலி செய்யுங்கள்
உங்கள் கூடாரங்களை

இல்லையெனில் எங்களுக்கு
பிச்சை போடுபவர்கள்
உமிழ்வார்கள் எங்கள் மேல்

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு

எந்த மடையன் சொன்னது ?

உங்கள் விவசாய நிலத்தில்
அதிவேகமாக கார் ஓடினால்தான்
இது வல்லரசு

உங்கள் விவசாயத

மேலும்

சத்யா - சத்யா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2018 9:15 pm

காண்பரஸ் கால் பேசானா

ஒரு பொண்ணு இல்லாட்டியும்
ஒரு பொண்ணு வீட்டுல 
சொல்லும்னு தெரியும்

எல்லா மொபைல் போன்லயும்
கால் ரெக்கார்ட் ஆப்ஷன் 
இருக்கும்னு தெரியும்


நம்ம பெண்ணுங்க கிட்ட
தப்பா பேசுனா
கலவரம் வரும்னு தெரியும்

எல்லாம் தெரிஞ்சும்
தைரியமா பேசுறான்னா
என்ன அர்த்தம்

நாம எல்லாருமே
காவிரிய பத்தி
ஸ்டெர்லெட் பத்தி
நியூட்ரினோ பத்தி
விவசாயி பத்தி
பேசுறத மறந்துட்டு
இப்படி பைத்தியம் மாதிரி
நிர்மலா தேவிய பத்தி
பேசுவோம்னு தெளிவா
பிளான் பண்ணி
கிளப்பி விட்டுருக்காங்க

இது கூட நமக்கு
புரியலையேன்னு நினைச்சாதான்
கவலையா இருக்கு

மேலும்

சத்யா - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2017 10:31 am

யாராவது கடவுளை கண்டால் சொல்லுங்கள்

ஆத்திகராயினும்
நாத்திகராயினும்
நாமத்தினராயினும்
பட்டையிராயினும்
சிலுவையராயினும்
பிறையினராயினும்
பகுத்தறிவோராயினும்

எவரேனும் ஒருவராவது
கடவுளை கண்டால்
தயவு செய்து சொல்லுங்கள்
பூமிக்கு வரவேண்டாம் என்று

காவிகளுக்கும்
கருப்புகளுக்கும்
கிருபைகளுக்கும்
தொழுகைகளுக்கும்
இடையில் நசுங்குவதும்
பலிகடாவாவதும்
பகடைகளாய் போவதும்
எங்களுடனே போகட்டும்

அரசியல் சந்தையில்
அதிக லாபத்திற்கு
அமோகமாய் விற்பனையாவதும்
கடவுள் பிரிவினைதான்

எல்லா கட்சியிலும்
எல்லா பிரிவும் உண்டு
ஒருவேளை பிரிவுகள்
மாறி ஒற்றுமை கண்டால்
தங்கள் பிழைப்பு பிழைக்காது
என்று ப

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (69)

இவரை பின்தொடர்பவர்கள் (69)

user photo

V.SATHISH

chennai
springsiva

springsiva

DELHI
sarabass

sarabass

trichy
மேலே