சிந்தை சீனிவாசன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சிந்தை சீனிவாசன்
இடம்:  அரியலூர்
பிறந்த தேதி :  03-Jan-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2016
பார்த்தவர்கள்:  4044
புள்ளி:  81

என்னைப் பற்றி...

மருத்துவ மாணவன். மருத்துவத்தோடு தமிழின் மகத்துவத்திலும் காதல் கொண்டவன்.....ஒளி தேடி வாழ்விலே நீர் வழியும் விழியோடும் வலியோடும் வழியின்றி தவிக்கும் வாழ்க்கை பயணி....

என் படைப்புகள்
சிந்தை சீனிவாசன் செய்திகள்
சிந்தை சீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2019 5:10 pm

வா!
என் கனவினை
வண்ணம் தீட்டு!
பட்ட மரத்தினைப்
பூக்க செய்!
பாலை வனத்தில்
ஊற்றெடுத்து வா!
மௌனத்தில் மூழ்க செய்!
விழிகளால் உள்ளம் கொய்!
பேசு! உன் பாஷை
எனக்கு மட்டும் புரியட்டும்!
ஏசு! அதில் கொஞ்சம்
சிணுங்கல் இருக்கட்டும்!
காலத்தைச் சிறைபிடி!
தூக்கத்தைக் கொள்ளையடி!
உன் உள்ளங்கை அசைவுகளால்
உலகத்தை உறைய வை!
காதல் தீ மூட்டு!
குளிராய் எனை வாட்டு!
கண்ணீரில் நீந்த வை!
கன்னத்தை ஏந்தி கொள்!
மகனாக மடியில் கொஞ்சு!
மகளாகத் தோள் சாய்!
உணர்வு வெள்ளத்தில் மட்டும்
உறவால் தம்பதிகள்!
வா!
விரல் கோர்!
உயிர் சேர்!
தனித்தீவில் தத்தளிப்போம்!
வா!

மேலும்

சிந்தை சீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2019 3:46 pm

வானம் பார்த்து
வாழ்வு ஓட்டும் ஊரிலே
கூலி பார்த்து
நாளை ஓட்டும் குடும்பம்!

அந்தக் குடும்பத்தில்
மகனாய்ப் பிறந்ததுமே
மகுடமாய் ஏறிவிட்டது
குடும்ப சுமையும்!

அரை காணி நிலம் வித்து
அக்காள்கள் மணம் முடித்தேன்!
கால் காணி மிச்சம் வைத்து
கால் வயிறு கஞ்சி குடித்தோம்!

காவிரியும் வற்றியது!
கால்காணியும் வற்றியது!
அதை நம்பி பிழைப்போட்டிய
அடிவயிறும் வற்றியது!

வயல்காடு தான் ஏமாற்றியது!
அதை விற்று
அயல்நாடாவது செல்ல நினைத்தேன்!

அதற்கும் வந்து நின்றான்!
பட்டா என் பேரிலென
பங்காளி!

அக்காள்கள் சரடு வித்து
முக்கால் தர,
மீதிக்குப் பிள்ளையின்
இடை கொடியை
அடகு வைத்தேன்!

மேலும்

சிந்தை சீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2019 5:42 pm

மெரினாவில் மூன்றாம் எண்
கூண்டு ஏற்றம்!
எப்படி புரிய வைப்பேன்!
அவை,
கரையில் உன் பாதம் தொட
கடல் நீட்டும் ஆசை கரம் என்று...

மேலும்

சிந்தை சீனிவாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2019 10:40 pm

வண்டிமாடு
வரப்புமேடு ஏறுனாத்தான்
வயித்துக்குச் சோறு!

பிச்ச எடுத்தாச்சும்
படிக்க வையினு
பெரியவங்க சொல்லிப் போக...

கடனவுடன வாங்கியாச்சும்
காலேஜி வர அனுப்பனும்னு
கனவு கண்டேன்!

பாமரனுக்குப் படிப்பெதுக்குனு
மூனாங்கிளாசில் முட்டுப் போடுது
இப்ப வந்த கல்விக்கொள்கை!

இங்கிலீச இங்கிதமா
நடத்த இங்க வழியில்ல!
இதுல இந்தி வந்து கூட்டுச் சேர
மூனுமொழிக் கொள்க வருதாம்!

எம்புள்ள எம்பிபிஎஸ்
ஆகக் கண்ட கனவு எல்லாம்
கானல் நீரா காணாப் போச்சே...
நீட்டு போட்ட பூட்டுனால!

கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு
தெருவில் புள்ள நடந்துபோக
நானுந்தான் ஆசப்பட்டேன்!
வறுமக்கோட்ட தாண்டக்கூட
வழிகொடுக்க தயங

மேலும்

சிந்தை சீனிவாசன் - சிந்தை சீனிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2019 3:59 pm

தொடக்கத்தில் பிறப்பு தேடல்!
பிறந்த பின்னே இறப்பு தேடல்!
வறுமைக்குப் பணம் தேடல்!
பணத்திற்கு நிம்மதி தேடல்!
ஏமாந்த மனதிற்குத் தனிமை தேடல்!
ஏகாந்த தனிமைக்கு
உறவுகள் தேடல்!
வாலிப வயதில் காதல் தேடல்!
காதல் வந்ததும் காமம் தேடல்!
அண்ட தொடக்கமே அறிவின் தேடல்!
அதனின் அந்தமே ஆன்மீகத் தேடல்!
பசிக்கும் உடலின் உணவு தேடல்!
பணம் பெருத்த பின் பசியே தேடல்!
வாழ்வில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேடல்!
வாழும் வாழ்க்கையே ஒருவகை தேடல்!

மேலும்

நன்றி நட்பே! 27-May-2019 6:49 pm
ARUMAI 26-May-2019 9:03 am
சிந்தை சீனிவாசன் - சிந்தை சீனிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2019 1:53 pm

என் மையல்தான்
தெரியவில்லை உனக்கென்றால்...
கண்ணீராவது காண்பிக்க
நினைத்தேன்!
அதையும் மறைத்து
அழித்தது!
திடீரென வந்த மழை...

மேலும்

சிந்தை சீனிவாசன் - சிந்தை சீனிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2019 8:00 pm

உனைத் தீண்ட வேண்டுமென்றே
இரவெல்லாம் கண்விழித்தேன்!
உன் காலை முனங்கல் சத்தம்
என் காதைத் தழுவும் போதும்
படுக்கை கலைய மனமின்றி நானிருந்தேன்!
உனைப் பார்க்கும் போதெல்லாம்
எனக்கே அறியாமல் என்னிதழ் விகசித்தேன்!
ஆசிரியர் பார்க்கா நேரம்
உனைப் பார்க்க நான் களித்தேன்!
பாசம் நேசம் காதல் காமம்
அன்பு கோபம் என
அத்தனையும் உன்னகத்தே பகிர்ந்தளித்தேன்!
எனைப் போதை அடிமையென ஆக்கிய
அலைபேசியே!
உன் ஆயுள்தண்டனை தனில்
மனித இன விடுதலை என்றோ?

மேலும்

சிந்தை சீனிவாசன் - சிந்தை சீனிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2019 10:30 pm

முத்தத்திற்கு ஏங்கும்
இருதலை காதலை விட
முகம் பார்க்க ஏங்கும்
ஒருதலை காதல்
சுகமானது!

மேலும்

சிந்தை சீனிவாசன் - சிந்தை சீனிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2019 11:41 am

உச்சி மோர்ந்தாள்!
சினுங்கல் ரசித்தாள்!
அந்தரங்க அமிர்தம் தந்தாள்!
வலியில் சுகம் கண்டாள்!
வாரி அணைத்துக் கொண்டாள்!
முந்தானை பாய் விரித்தாள்!
என் வாசம் பூசிக்கொண்டாள்!
இரவுகளின் தொல்லை பொறுத்தாள்!
ஈரத்தில் மேனி குளித்தாள்!
முத்தத்தில் நனைய வைத்தாள்!
மொத்தத்தில் நினைவாலே உருகிப் போனாள்!
உதிரத்தால் உயிரேற்றிய உத்தமி தாய்...

மேலும்

சிந்தை சீனிவாசன் - சிந்தை சீனிவாசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2018 1:47 pm

என் கல்லூரி மாணவர் மன்றம் மற்றும் கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவிற்கு நல்ல தமிழ்ப்பெயர்களைப் பரிந்துரை செய்யுங்கள் நண்பர்களே...

மேலும்

புழக்கத்தில் அதிகம் இல்லாத சொல் எப்படி வசீகரமாயியிருக்கும் ? 1 .கலா மேக்னெட்டிக் ஆஸ்ரமம் ---தமிழ் இங்கிலீஷ் சமிஸ்கிருதம் கலந்த பெயர் கலா --கலை மேக்னெட் --வசீகரம் ---ஆஸ்ரமம் ---ஆழ்ந்த அர்த்தமுள்ளது 2 . சிந்தா ஓவியா 3 . எண்ணாலயா 4 . கற்பனாலயா 5 . கற்பனைச் சிறகுகள் 6 .கணினி அப்ஸரா 7 . நீல நயனா 8 . பொழில் நிலா 9 . பொய்கை மலர் 10 . நிலா முற்றம் 11 . வசந்தப் பறவை 12 . கலைச் சுவடிகள் ----தொடரவோ ? 28-Feb-2018 6:40 pm
கலைகுடில் 26-Feb-2018 2:30 pm
நுட்பதெப்பம் 26-Feb-2018 2:30 pm
பொதிகை சாரல் 26-Feb-2018 2:28 pm
சிந்தை சீனிவாசன் - ரசீன் இக்பால் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2016 8:43 pm

தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

மேலும்

பொதுவாக மொழிகளுல் ஒற்றுமை வேற்றுமை இதுக்கலாம். உயர்வு தாழ்வு கூடாது. தமிழ் ஆங்கில ஒற்றுமை அறிவை தருவதும், இனிமையானதும் உயிர் எழுத்தும், மெய்யெழுத்தும் இருப்பதும் மேலும் War என்பது போர் எனவும் Pour என்பது வார் எனவும் இயைந்து வரும். ஆங்கிலம் போலவே தமிழிலிலும் ஏராளமான வேற்று மொழி சொற்கள் உள்ளன. வேற்றுமைகளில் முதன்மையானது தமிழ் உணவுக்கு பின் ஆங்கிலத்தில் After meals. தமிழ் பெயர் என்ன? what is the name? தமிழ் இப்போது மணி என்ன? what is time now? எழுவாயும் பயனிலையும் முன்பின்னாக மாறி அமையும். இவை தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் நானறிந்த ஒற்றுமை வேற்றுமைகள். 31-Dec-2016 12:47 pm
அருமை மிக்க நன்றி கவிப்பிரிய ரஸீன் அன்புடன், கவின் சாரலன் 30-Dec-2016 3:31 pm
அருமை மிக்க நன்றி கவிப்பிரிய மு. ரா அன்புடன், கவின் சாரலன் 30-Dec-2016 3:31 pm
நிச்சயமாக.. அனைத்து மொழிகளையும் மதித்து நடப்போம்.. 30-Dec-2016 2:47 pm
சிந்தை சீனிவாசன் - சிந்தை சீனிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2016 10:45 pm

மனம் விரும்பும் தனம்

என்
மனக்கோட்டை தனில் நுழைந்த
தனலட்சுமியே.....
ஒருலட்சம் முறையேனும்
எண்ணி இருப்பேனடி உனை
கனப்பொழுது நேரத்திலே.....
குணலட்சனம் புடைசூழ்ந்த
தனலட்சுமியே...... உன்
மனதனத்தை தானம் அளி!
உனை மணமுடிய துடிக்கும்
கயவனிடம்....

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே! 09-Dec-2016 6:50 pm
நண்பரே அந்த கடைசி வரியை "கயவனுக்கு" பதில் "பித்தன்" என்று எழுத அழகு ................. ! 09-Dec-2016 1:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

user photo

சுவாதி ஸ்ரீ

அரியலூர்
சத்யா

சத்யா

Chennai
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
ரமணி

ரமணி

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சத்யா

சத்யா

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)
ரமணி

ரமணி

chennai
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
மேலே