கிறுக்கல்கள்
ஏழை ஆசையில் வறுமை கிறுக்கல்கள்!
சமுத்துவம் தேடினால் ஆதிக்கக் கிறுக்கல்கள்!
கல்வித்தாளில் பணத்தாள் கிறுக்கல்கள்!
திறமை ஏட்டிலே வருக்க கிறுக்கல்கள்!
உயர நினைத்தால் ஏளன கிறுக்கல்கள்!
இசை கேட்டால் செவியில் வசையே கிறுக்கல்கள்!
கவிதை ஏட்டில் கரு மை கிறுக்கல்கள்!
எதிர்காலக் கனவில் இருளாய்க் கிறுக்கல்கள்!
பசிக்கும் வயிற்றில் பட்டினி கிறுக்கல்கள்!
பாச நெஞ்சில் துரோகக் கிறுக்கல்கள்!
உழைத்தால் உறிஞ்சும் கார்ப்பரேட் கிறுக்கல்கள்!
உயர்ந்தால் அமுக்கும் அடக்குமுறை கிறுக்கல்கள்!
இப்படி
கிறுக்கு உலகின் கிறுக்கலில் பிறந்த ஓவியம் நான்!
இந்த
கிறுக்கல் ஓவியம் வண்ணமாதல் எந்நாளோ?