ஆயுள்தண்டனை

உனைத் தீண்ட வேண்டுமென்றே
இரவெல்லாம் கண்விழித்தேன்!
உன் காலை முனங்கல் சத்தம்
என் காதைத் தழுவும் போதும்
படுக்கை கலைய மனமின்றி நானிருந்தேன்!
உனைப் பார்க்கும் போதெல்லாம்
எனக்கே அறியாமல் என்னிதழ் விகசித்தேன்!
ஆசிரியர் பார்க்கா நேரம்
உனைப் பார்க்க நான் களித்தேன்!
பாசம் நேசம் காதல் காமம்
அன்பு கோபம் என
அத்தனையும் உன்னகத்தே பகிர்ந்தளித்தேன்!
எனைப் போதை அடிமையென ஆக்கிய
அலைபேசியே!
உன் ஆயுள்தண்டனை தனில்
மனித இன விடுதலை என்றோ?

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (30-Mar-19, 8:00 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 1506

மேலே