பொல்லா ஆட்சி
தேடுதல் எதுவென
நீ
தெரிந்து தேடு
தேர்தலில் உன்
தேர்வு
சரியானதாகும்
உன் தேடுதலில்
உத்தமன் ஒருவன்
உன் கருத்துக்கு
தெரிய
பொல்லாஆட்சி
இல்லாது போகும்
கண்கள் உன்னை
ஏமாற்றினால்
திரௌபதியாய் நீ
சபையில்
நிற்கதான் வேணும்
பாரதக் கண்ணன்
வரமாட்டான்
உன்னை காப்பாற்ற
தேர்வு உனதல்லவா