மன்றுசார் வாக மனை - சிறுபஞ்ச மூலம் 46

நேரிசை வெண்பா

அழியாமை யெத்தவமுஞ் சார்ந்தாரை யாக்கல்
பழியாமை பாத்தல்யார் மாட்டும் - ஒழியாமை
கன்றுசா வப்பால் கறவாமை செய்யாமை
மன்றுசார் வாக மனை! 46

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

எவ்வகைப்பட்ட தவத்தினையும் கெடுக்காமையும், தம்மை வந்தடுத்தவரை உயரச் செய்தலும், பிறர் தம்மைப் பழியாமல் யாவரிடத்தும் மறைக்காமல் பகுத்துண்டலும், கன்று இறந்துபோனபின் அதன் (தாய்ப்பசுவின்) பாலைக் கறவாமையும் மன்றை யடுத்திருக்க மனையெடாமையும் (ஆகிய இவை நன்மையென்று கூறுவர் பெரியோர்!

கருத்துரை:

தவத்தை யழிக்காமையும் அடைந்தாரை யாக்குதலும், பிறர் தவத்தைப் பழியாமையும் கன்றிறிந்த பசுவைப் பால் கறவாமையும் வேறு சார்வாக மனை யெடாமையும் நற்செயல்களாம் என்பதாம்.

தவத்தை நிந்தித்தலாவது - தவத்திற்கு இடையூறு செய்தல்; மன்று - நீதித்தலம், சபை;
மனைசெய்தல் - வீடெடுத்தல்; கட்டுதல்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Oct-25, 6:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே