ச செந்தில் குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ச செந்தில் குமார்
இடம்:  Bodinayakanur
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2018
பார்த்தவர்கள்:  1613
புள்ளி:  130

என்னைப் பற்றி...

தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட ஓர் வாசகன்

என் படைப்புகள்
ச செந்தில் குமார் செய்திகள்
ச செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2020 10:16 am

 உன் விழிகளில் பிறக்கும் கவிதை அழகு ...

இரவில் மின்மினிகளை ஈன்றுக் கொண்டிருக்கும் வானம் போல்
உந்தன் விழிகள் கவிதைகளை ஈன்றுக் கொண்டிருக்கிறது ...

மேலும்

ச செந்தில் குமார் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2020 10:45 pm

விடுமுறை முடித்து வந்த நிலவு
பிறை அழகில் வானில்
விடுதலையையே விரும்பும் சுதந்திரக் காற்று
இளவேனில் மலரிதழில்
விழிவிரிய மின்னல் கீற்று ஒளிர
இதழ்விரியும் புன்னகை அழகில் நீ
மொழி எடுத்து சொல்லெடுத்து முக்கனிச் சாறெடுத்து
புனையும் கவியழகில் நான்
எழிலெடுத்துவந்து நின்று பார்க்கும் அந்தி வானுக்கு
இன்று விடைபெறவே மனமில்லை !

மேலும்

ச செந்தில் குமார் - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2020 12:16 pm

பள்ளியில் கல்லூரியில்
வேலைசெய்யும் இடத்தில் என்று

வரிசையாக தந்து விட்டேன் என்
புகைப்பட நகலை

இப்பொழுது கல்யாண சந்தையில்
காட்சிப் பொருளாய்

மேலும்

நன்றி 15-Jan-2020 12:19 am
அருமை... 14-Jan-2020 1:10 pm
ச செந்தில் குமார் - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2020 11:24 am

வான வீதியில்
விண்மீன் விளக்குகள்,
கூடித் தேடுகின்றன
மண்ணில்
மாசில்லா மனிதனை...!

மேலும்

மிக்க நன்றி...! 18-Jan-2020 8:05 pm
அருமை... 13-Jan-2020 9:58 pm
ச செந்தில் குமார் - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2020 10:15 pm

சாதியை வளர்த்தது யார்

காலிசெய்வேன் நானும் காலிசெய்வேன் சாதியையும்
காலிசெய்வேன் என்றார் திராவிடக் - காலிடப்பா
வாய்க்கிழியப் பேசியே தாய்நாட்டை ஆண்டயிந்தப்
பேயே வளர்த்ததுநீ ரூற்றிதந்தைநாயக் கன்முதலி யண்ணன் பலசாதி
வந்தாரம் பித்தார கருஞ்சட்டை- - சந்தை
தியாகிகள் இல்லை திராவிடமென் றப்பொய்
சுயாட்சிமிட்டாய் பேச்சிலும் தான்

இருபதாண்டில் உண்டியலால் பெற்றார் உருவம்
தருதலை யானார் சனமும் - - பெருந்தனம்
பெற்ற இராமசாமி அற்றங்கண் டுத்தவிக்க
மற்றோர் உயர்ந்தார் வென்று

வந்ததும் சொந்தசாதிப் பேர்மாற்றம் வேளாளர்:
விந்தையிது மற்றவரும் வேளாளர் - - நிந்தித்தார்
முற்பட்டான் பிற்பட்டோ னாம்மிகப்பிற் பட்டோனா

மேலும்

மகி அவர்களுக்கு வணக்கம் பழமொழி பிறர்காம் தமக்கில்லை எனும் கும்பலவரும். தே 09-Jan-2020 9:52 am
பிறசாதி வளர்த்தால்தன் பெண்சாதி வளரும் தனம்வளரும் - அவர், பெண்சாதி வளருங்கொள் பேரச்சாதீ வளரும் !! 08-Jan-2020 11:36 pm
ச செந்தில் குமார் - ச செந்தில் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2019 9:20 pm

சிற்றெறும்பின் வழித்தடம் போல
மக்களின் படையெடுப்பு பெரிய வணிகர்களை நோக்கி
கடை வீதிகளிலே!

சில்லரைகளையும் சிதற விடுவதில்லை சிறுவியாபரிகளிடத்தில்!

நோட்டுகளை கொட்டிவிடுவர் பகட்டான
பெரும்கடைகளிலே!

வட்டிக்கு வாங்கி வந்த பொருளெல்லாம்
ஈக்கள் கூட மொய்க்க வரவில்லையே!

நான் கூவி விற்கும் வார்த்தைகளெல்லாம்
இவர்கள் செவிபுலனில் ஏறவில்லையே!

பார்த்து பார்த்து வாங்கிய பொருள்களையெல்லாம்
அடுக்கி வைக்க இடமில்லையே!
அழகு கூட்டி அடிக்கி வைத்த பொருள்களை காண இவர்களிடத்தில் மனமில்லையே!

வயிறு ஒட்டி ஒன்றிரண்டு வந்ததடா
பேரம் பேச மனமில்லை கொள்முதல் விலைக்கு வென்றதடா!

வழக்கம் போல பண்டிகையை
அடுத

மேலும்

நன்றி ... 04-Jan-2020 10:24 am
இதுவும் கடந்துபோகும், மாற்றம் ஒன்றே மாறாதது. தொழில் என்பதே , தொய்வும் உய்வும் கலந்த களமே , சிறுவணிகம் சிறக்க நுட்பம் கண்டு பெரு வணிகமும் செய்திடலாம்! 02-Jan-2020 4:30 pm
ச செந்தில் குமார் - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2019 2:45 pm

பார்வையை தின்று பசியாற பழகு
இதயம் முழுதும் புகைப்படம் மாட்டு
இரவும் பகலும் தவிப்புடன் கிட
பார்க்கும் யாவிலும் அவள் முகம் தேடு
பசியை மறந்து பட்டினியாய் இரு
நடை உடை மாறி புதிதாய் பிற
சிறகுகள் இன்றி வானத்தில் பற
இரவு முழுதும் விழித்தே கிட
சாலைகள் ஓரம் தவங்கள் புரி
எழுத்துப் பிழைகளுடன் கவிதைகள் இயற்று
மெதுவாய் நகரும் கடிகார முட்களுடன்
சண்டைகள் போடு
ஒரு நொடி பார்வைக்காய்
மணிக்கணக்காய் காத்திரு
கடந்து போகும் நிமிடத்திற்காய்
கால் வலிக்க காத்திரு
கண்ணாடி முன் நின்று
ஒத்திகை பார்த்துக்கொள்
நண்பர்களை விட்டு தனிமையில் தவி
அனைவரிடமும் அதிகமாய்
பொய் சொல்லக் கற்றுக் கொள்

இளமை என்றும்

மேலும்

மிக்க நன்றி நண்பரே 07-Jan-2020 11:46 am
அழகிய உணர்வுகளின் வரிகள். 02-Jan-2020 4:34 pm
மிக்க நன்றி நண்பரே 09-Dec-2019 2:46 pm
மிகவும் அருமை... 09-Dec-2019 8:49 am
ச செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2019 6:50 am

அன்பு மகள் - 2

வானம்பாடிகள் பாட மறந்து
கதைகேட்கும் இவளிடம்
எனக்கோ இருசெவிகள் போதவில்லை!

மூங்கில் காடுகள் துளைகளில்லாமல் இசைக்கின்றன இவள்
குறும்பு பார்வையிலே
என் புன்னகையை குழந்தையாக்கும் வித்தைக்காரி!

சிகரங்கள் தலை வணங்கித்தான் போகிறது
இவள் கோபமாக இருக்கிறேன் என்றுரைத்தால்
எனக்கோ சொற்களை யாசிக்கும் நெஞ்சம்!

வைகைநதி கரைகள் செந்தமிழ் பாட்டிசைக்கின்றன
இவள் நடையசைவிற்கு
என் பார்வையில் பூக்கள் பூத்து
வழியெங்கும் நிரப்புகின்றன!

காற்றினிலே கனிகள் உடைந்து
இனிய நறுமனங்களாக முத்தமிடும்
இவள் பேச்சினிலே
என் சிந்தைக்கு சிறகுகள் முளைத்து
கற்பனை கவிதைகளை புனைகின்றன!

மேலும்

ச செந்தில் குமார் - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Nov-2019 10:06 am

========================================================

நான் உறங்குகிறேன்.

அதை அவர்கள்
பார்க்கிறார்கள். மேலும்
மழை பொழிகிறது.

காற்றின் ஈரத்தில் குளிர்
கூடி வருகிறது.
நான் குளிரில் கலைவதை
அவர்கள் விசனத்துடன்
அங்கலாய்க்கிறார்கள்.

தெரியும் கால்களில் சிதறிய
சிறு பனியை விலக்கி பின்னர்
போர்வையில் மூடுகிறார்கள்.

மழை விசிறி பெய்வதை
அவர்கள் உணர்கிறார்கள்.
என் உறக்கத்தின் மீதான
நம்பிக்கை தளர்கிறது.

அவர்கள் இப்போது
மழையை வெறுக்கின்றனர்.

மழை, ஆகாயத்தின் ரம்யம்
என்று பெரோஷி கூறுகிறாள்.

நான் இடப்புறம் திரும்பி
ஒருக்களித்து கொள்கிறேன்.

என்னிடமிருந்து சிற்சில
நட்சத்த

மேலும்

அப்போது நான் பெரோஷியின் கைகளை பற்றிக்கொள்ள விரும்புகிறேன். -----பின் குஷிதான் இதுதான் என் சிற்றறிவிற்குப் புரிந்தது . 02-Dec-2019 9:07 pm
....மூடனின் அலைச்சல்போல் சில மழைத்துளிகள் தெரிகின்றன..... இப்போது புரிகிறது கவிதை நண்பரே இன்னும் எழுதுங்கள் 28-Nov-2019 12:42 pm
பெரோஷி...யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது நீங்கள் அல்லது உங்கள் மனம். மழை இருள் என்பது துன்ப துயரம் அல்லது தனிமை... கவிதையை நாம் விளங்கி கொள்வதை விடவும் மனதுக்கு முழு சுதந்திரம் தரும்போது அது முழுக்க விளங்கி கொள்ளும். என்ன...மனம் விளக்கும் போது நாம் அதனுடன் தர்க்கம் செய்வோம்...அதுதான் சிக்கல். பெரோஷி ஒரு குட்டி கலகக்காரி. 28-Nov-2019 10:35 am
என்னிடமிருந்து சிற்சில நட்சத்திரங்கள் நழுவி ஓடுகிறது. இரவுகள் பின்னர் அதனை பொறுக்கி அணியும்போது நிலவு கூச்சம் கொள்ளும் என்று பெரோஷி மீண்டும் சொல்கிறாள் அருமை நண்பரே!... 27-Nov-2019 11:05 pm
ச செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2019 10:43 pm

பொன்மாலைப் பொழுதில்
வண்ணநிறங்கள் உமிழும் சூரியகதிர்கள்
மலைகளின் பசுமைகளில் படர்ந்து
வைகைநதியிலெழுந்த நீர்க்குமிழ்களில் சிதறி
மரக்கிளைகளிலாடும் இலைகளினிடையே ஊடுருவி
அன்னார்ந்து நீர் அருந்தும் அவளின் மேல் விரவ
தென்றல் கருங்கூந்தலினிடையே ஆட
பொன்னிறமாய் காட்சியளிக்கிறாள்...

பொன்மின்னும் தோற்கும் முகழகா இல்லை
பகலிலே வண்ண மின்மினிகளை ஜனனிக்கும் முகழகா!
வெண்திரவ நதிபாயும் குரல்வளையா இல்லை
புனலோடும் தாமரை இலை நதியா!

என்குற்றம் செய்தேனோ அவள் தாகம்தீர
என் தாகத்தை கூட்டிவிட்டாளே!

மேலும்

👌👌 02-Jan-2020 4:14 pm
ச செந்தில் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2019 9:41 pm

தென்றல்

மேகங்களின் வெள்ளிக் கொலுசு மணிகளை
அவிழ்த்து விட்டுச் செல்வது யாரோ?

சிரிக்கும் பூக்களின்
நறுமணத்திற்கு சிறகுகள் பூட்டியது யாரோ?

உதிரும் சிறகுகளை சுமந்து சென்று
பத்திரமாக தரையிறக்குவது யாரோ?

பல்வண்ண பூக்களை அனிமோபீலியாக - பூமகளின்
கூந்தலில் சூடிச் செல்வது யாரோ?

கனல் விரியும் சூரியக் கதிர்களுக்கு
இதமாக முத்தமிட்டுச் செல்வது யாரோ?

தொட்டிலிலாடும் கனிகளுக்கு இனிய
கற்பனை கதைகள் கூறுவது யாரோ?

மேலும்

ச செந்தில் குமார் - சேக் உதுமான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2019 12:37 pm

பச்சை நிற சேலையில்
பளிச்சென்று இருப்பவளே!

பாரபட்சம் பார்க்காமல்
பார்வையால் மனதை
பட்டென்று பறிப்பவளே!

பெண்ணே!

உன் செவ்விதழில்
வானவில் வந்து வசித்து கொள்ள
நினைக்குதடி!

உன் கருவிழியை
கடத்தி கொண்டு போக
நிலவு திட்டம் தீட்டுதடி!

உன் கண்ணக்குழியில்
பதுங்கி கொள்ள
பிரபஞ்சம் உன் பின்னால் சுத்துதடி!

நீ கடந்து போகும் போது
உன் வாசனையை
சுவாசித்து உயிர் வாழ
காற்று கூட காத்துக் கிடக்குதடி!

உன் உள்ளங்கையில்
கைக்குட்டையாய் மடிந்து கொள்ள
மேகங்கள் எல்லாம் தவிக்குதடி!

கண்னே!

தேன் சிந்தும் உன் புன்னகை!
வான் கொஞ்ச நினைக்கும் காரிகை!

அழகியே!
என்னை மறந்து
எழுதுகோல் இல்லா

மேலும்

ரொம்ப நன்றி சகோ 😍 28-Nov-2019 8:18 pm
மிகவும் அருமை... 23-Nov-2019 8:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
PRIYA

PRIYA

புதுக்கோட்டை
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (25)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
PRIYA

PRIYA

புதுக்கோட்டை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (25)

விமுகா

விமுகா

கோ.பவழங்குடி
BABUSHOBHA

BABUSHOBHA

அவிநாசி,திருப்பூர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே