அன்பு மகள் - 2
அன்பு மகள் - 2
வானம்பாடிகள் பாட மறந்து
கதைகேட்கும் இவளிடம்
எனக்கோ இருசெவிகள் போதவில்லை!
மூங்கில் காடுகள் துளைகளில்லாமல் இசைக்கின்றன இவள்
குறும்பு பார்வையிலே
என் புன்னகையை குழந்தையாக்கும் வித்தைக்காரி!
சிகரங்கள் தலை வணங்கித்தான் போகிறது
இவள் கோபமாக இருக்கிறேன் என்றுரைத்தால்
எனக்கோ சொற்களை யாசிக்கும் நெஞ்சம்!
வைகைநதி கரைகள் செந்தமிழ் பாட்டிசைக்கின்றன
இவள் நடையசைவிற்கு
என் பார்வையில் பூக்கள் பூத்து
வழியெங்கும் நிரப்புகின்றன!
காற்றினிலே கனிகள் உடைந்து
இனிய நறுமனங்களாக முத்தமிடும்
இவள் பேச்சினிலே
என் சிந்தைக்கு சிறகுகள் முளைத்து
கற்பனை கவிதைகளை புனைகின்றன!

