கண்ணீரே

இறுகிய
மண்ணை
இளக்கும்
தண்ணீர் போல!

ரணமான
என் மனதை
குணமாக்கும்
குளமே!

கண்ணீரே!
மெய்க்கும் பொய்க்கும்
வழியாகும் விழியை
மறைப்பது ஏனோ?

விழியைப் பார்க்கும்
இவ்வுலகம்
விழி வழி என்
வலியைப் பார்க்க
மறுப்பதும் ஏனோ?

எழுதியவர் : இராம்குமார்.ப (30-Nov-19, 8:42 pm)
சேர்த்தது : இராம்குமார்
Tanglish : kanneere
பார்வை : 224

மேலே